
இந்திய அணி தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வருவது பற்றி கபில்தேவ் கருத்து கூறுகையில், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கவனம் சிதறிப் போய்விட்டது. வெற்றியை சந்திக்க அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறும் அணியாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் அனைவரும் ஒரு கவாஸ்கராகவோ அல்லது சச்சின் டெண்டுல்கராகவோ வரவேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். இவர்களைத்தான் தங்களது ரோல் மாடலாகக் கருதுகின்றனர். வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்ற ஆர்வம் குறைவாகவே உள்ளது.
பாகிஸ்தானில் அப்படி அல்லை. சின்னக் குழந்தை கூட ஒரு இம்ரான்கானாக, வாசிம் அக்ரமா அல்லது வகார் போல வரவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர். அங்கு இருக்கின்றன ரோல் மாடல் அப்படி.
தற்போதைய நிலையில் அனைத்து வீரர்களுமே தனித்தனியே கோச்சுகள், மருத்துவர்கள் வைத்திருக்கின்றனர். இதனால் நாம் ஒரு அணி என்கிற உணர்வு குறைந்துபோய்விடுகிறது என்றார்.
கபில் சொல்வதும் உண்மைதான். காரணம், இந்திய அணியும் சரி, மீடியாக்களும் சரி, வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டாடத் தவறிவிடுகின்றன. இதனால் புதிய வீரர்கள் பேட்ஸ்மேனாவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.