Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லியில் முகாமிட்டிருக்கும் டெண்டுல்கரின் அண்ணன்..அப்படின்னா?

Why is Ajit Tendulkar in the Capital?
டெல்லி: டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் டெண்டுல்கரின் அண்ணன் அஜித் டெண்டுல்கர் டெல்லியில் முகாமிட்டிருப்பது பலரது புருவங்களை ஆச்சரியத்தில் உயர்த்தியிருக்கிறது.

தாம் விளையாடும் போது தமது ஆட்டத்தை தொலைக்காட்சிகளில் அண்ணன் அஜித் டெண்டுல்கர் பார்க்கமாட்டார். வானொலி சப்தம் கூட கேட்காத வெகு தொலைவுக்கு பயணம் செய்துவிடுவார் என்று டெண்டுல்கரே கூறியிருக்கிறார்.

ஆனால் இம்முறை டெல்லியில் டெண்டுல்கர் தங்கியிருக்கும் அதே ஹோட்டல் மெளரியாவில் ரூம் போட்டு தங்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுடனான நடப்புத் தொடர் முடிந்த பிறகு தென்னாப்பிரிக்கா செல்கிறது இந்திய அணி. பின்னர் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு டெஸ்ட் தொடர்களுக்காக செல்கின்றனர்.

அதனால் இந்திய மண்ணில் வெளிநாட்டு அணியுடனான கிரிக்கெட் போட்டி என்பது இன்னும் 18 மாதங்கள் கழித்தே நடைபெறும். அப்போது டெண்டுல்கருக்கு 41 வயதாகிவிடும். அவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வை அறிவிப்பாரோ? அதனால்தான் டெண்டுல்கரின் ஆட்டத்தை நேரில் காண அவரது அண்ணன் அஜித் டெண்டுல்கர் டெல்லியில் முகாமிட்டிருக்கிறாரோ? என்ற கேள்வி எழும்பியிருக்கிறது.

Story first published: Saturday, March 23, 2013, 16:21 [IST]
Other articles published on Mar 23, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+