For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புற்றுநோய்க்கு எதிராக போராடி வெல்வோம்... யுவராஜ் சிங்கின் பிறந்த நாள் செய்தி!

Yuvraj Singh
டெல்லி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

12-12-12 என்று ஒரே மாதிரியாக நம்பர்கள் வந்ததால் இன்றைய தினம் விசேஷமான தினமாகி விட்டது. இந்த விசேஷ தினத்தில் எதைச் செய்தாலும் அது மறக்க முடியாத ஒன்றாகி விடும் என்பதால் இன்று ஏராளமான கல்யாணங்கள், விசேஷங்கள் நாடு முழுவதும் களை கட்டியிருந்தன.

நடிகர் ரஜினிகாந்த்தும் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது ரசிகர்கள்தான் அவரை விட படு விசேஷமாகவும், குஷியாகவும் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இன்று அவருக்கு 31 வயது பிறந்தது. புற்றுநோய் என்ற மிகப் பெரிய அரக்கனிடமிருந்து மீண்டு வந்ததால், யுவராஜ் சிங்குக்கு இந்த பிறந்த நாள் மிகவும் விசேஷமாக மாறிப் போயிருந்தது.

தனது பிறந்த நாளையொட்டி டிவிட்டரில் அவர் வெளியிட்டிருந்த செய்தியில், 12-12-12. இன்று எனது பிறந்த நாள். புற்றுநோய்க்கு எதிராக இன்றைய நாளை நான் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார் யுவராஜ் சிங்.

மேலும், YOUWECAN என்ற தனது புற்றுநோய்க்கு எதிரான அமைப்புக்கு உதவுமாறும் ரசிகர்களுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் யுவராஜ் சிங். என்னால் புற்றுநோயை வெல்ல முடிந்தது, உங்களாலும் முடியும். நம்மாலும் இணைந்து அதை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார் யுவராஜ்.

Story first published: Wednesday, December 12, 2012, 17:04 [IST]
Other articles published on Dec 12, 2012
English summary
Indian Cricketer Yuvraj Singh celebrated his birthday on 12-12-12 in a special way.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+