Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட டெல்லி பெண்ணுக்கு ஆட்ட நாயகன் விருது சமர்ப்பனம்- யுவராஜ்

yuvaraj singh
புனே: டெல்லியில் ஓடும் பஸ்சில் மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு தனது ஆட்ட நாயகன் விருதை சமர்ப்பிப்பதாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

புனேவில் நேற்று நடந்த டுவென்டி 20 போட்டியில் இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்தவெற்றிக்கு யுவராஜ் சிங்கின் அபாரமான ஆட்டம்தான் காரணம். இதில் அவர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இதை டெல்லி பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சமர்ப்பிப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த விருதை டெல்லிப் பெண்ணுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த சம்பவம் மிகக் கொடுமையானது, சோகமானது, மனிதத்ன்மையற்றது. ஒட்டுமொத்த இந்திய அணியும் பெரும் வருத்தமடைந்தது என்றார் யுவராஜ் சிங்.

மேலும் அவர் கூறுகையில், அப்பெண்ணின் நிலை குறித்து எனக்குத் தெரியவில்லை. அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். எனக்குக் கிடைத்த விருதை அப்பெண்ணுக்கும், அவரது பெற்றோருக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் அப்பெண்ணுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றார்.

Story first published: Friday, December 21, 2012, 11:55 [IST]
Other articles published on Dec 21, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+