நடத்தை விதி மீறல் - ஜாகிர் கானுக்கு அபராதம்
மொஹாலி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறியதற்காக பந்து வீச்சாளர் ஜாகிர்கானுக்கு 80 சதவீத போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மொஹாலியில் 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இந்தியா 320 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருந்தபோது, மாத்யூ ஹெய்டன், ஹர்பஜன் சிங் பந்தில் அவுட் ஆனார். அவுட் ஆகி வெளியேறிக் கொண்டிருந்த ஹெய்டனை நெருங்கி அவரை தடுக்கும் வகையில் நின்று கொண்டு ஆக்ரோஷமாக குரல் எழுப்பினார். பின்னர் சக வீரர்களிடம் சென்று ஹெய்டனின் வெளியேற்றத்தைக் கொண்டாடினார்.
இதுகுறித்து போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார். அப்போது ஐசிசி நடத்தை விதியின் சி1 பிரிவின் கீழ் ஜாகிர்கான் குற்றம் இழைத்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கிறிஸ் பிராட் கூறுகையில், இந்த செயல் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஆட்டமிழந்த வீரரை அவமதிக்கும் வகையில் ஜாகிர்கான் நடந்து கொண்டுள்ளார்.
எதிர் தரப்பு வீரரிடம் மரியாதை செலுத்துவது மிகவும் முக்கியமானது. இதுகுறித்து தொடருக்கு முன்பாகவே இரு அணிகளின் கேப்டன்கள் கூட்டத்தில் இதுகுறித்து தெளிவாகப் பேசப்பட்டது. இருப்பினும் ஜாகிர் கான் நடந்து கொண்ட விதம் ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
இதற்காக ஜாகிர் கானுக்கு கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இருப்பினும், அவரது முந்தைய நன்னடத்ைதகளை கணக்கில் கொண்டுள்ளோம். மேலும், தனது செயலுக்கு ஜாகிர்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இனிமேல் இதுபோல நடக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.
எனவே அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது என்றார்.


Click it and Unblock the Notifications