Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் சொல்லிக் கொடுங்க.. இந்திய வீரர்களிடம் டிப்ஸ் கேட்ட ஜிம்பாப்வே வீரர்கள்

Zimbabwe players take cricketing lessons in Indian dressing room
புலவேயோ: இந்திய கிரிக்கெட் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற ஜிம்பாப்வே வீரர்கள், இந்திய வீரர்களிடம் டிப்ஸ் கேட்டது வினோதமாக இருந்தது.

ஜிம்பாப்வே, இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை, இந்தியா 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

கடைசிப் போட்டி முடிந்ததும், இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமுக்கு ஜிம்பாப்வே வீரர்கள் மொத்தமாக சென்றனர். அங்கு இந்திய வீரர்களைச் சந்தித்து வாழ்த்துச் சொன்ன ஜிம்பாப்வே வீரர்கள், கேப்டன்கோஹ்லி உள்ளிட்ட முக்கிய வீரர்களிடம் கிரிக்கெட் ஆட்டம் குறித்த பல்வேறு டிப்ஸ்களைக் கேட்டுப் பெற்றனர்.

இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி வாலர் கூறுகையில், தற்போது இந்திய வீரர்களின் டிரஸ்ஸிங் ரூமில் எங்களது வீரர்கள் உள்ளனர். நான்தான் அனுப்பி வைத்தேன். உலகின் மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி இந்தியா. எனவே அந்த வீரர்களைச் சந்தித்து நேருக்கு நேர் டிப்ஸ் பெறுவது மிக்ச சிறந்தது. எனவேதான் அனுப்பி வைத்தேன்.

இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை மாறாக அரிய வாய்ப்பு இது. கோஹ்லி போன்றவர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்களிடம்டிப்ஸ் பெறுவதற்குத் தயங்கக் கூடாது. கோஹ்லி மிகச் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த கேப்டனாகவும் உருவெடுத்துள்ளார். அவரது டிப்ஸ்கள் எங்களது வீரர்களுக்கு நிறைய உதவும் என்றார் வாலர்.

Story first published: Sunday, August 4, 2013, 17:12 [IST]
Other articles published on Aug 4, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+