விளையாட்டு துறைக்கு தொழிலதிபர்கள் தலைமை வகிப்பதா? சுப்ரீம் கோர்ட் காட்டம்
டெல்லி: விளையாட்டு வீரர்கள்தான் விளையாட்டு துறைக்கு தலைமை வகிக்க வேண்டுமே தவிர தொழிலதிபர்கள் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹாக்கி அமைப்புகள் தாங்களே இந்திய ஹாக்கி அணியின் பிரதிநிதிகள் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தன.
இது தொடர்பான விசாரணையில், அரசியல் குறுக்கீடுகளால் ஹாக்கி விளையாட்டு சீரழிந்து வருவதாகவும், தொழில் அதிபர்களை கொண்டதாக விளையாட்டு அமைப்பு இருக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
அத்துடன் விளையாட்டு அமைப்பில் விளையாட்டு துறையினர் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர தொழிலதிபர்கள் அல்ல என்றும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
Story first published: Thursday, December 5, 2013, 16:40 [IST]
Other articles published on Dec 5, 2013


Click it and Unblock the Notifications