Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடாததற்காக பிட்சை குறைசொல்வதா.. பத்திரிகையாளர் மீது அஸ்வின் சீற்றம்

மொகாலி: பேட்ஸ்மேன்கள் மோசமாக ஆடி அவுட் ஆனதற்காக மொகாலி பிட்ச் சரியில்லை என்று குறை கூற முடியாது என்று இந்திய ஸ்பின்னர் அஸ்வின் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின். இந்திய அணி 201 ரன்களில் தனது முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆன நிலையில், தென் ஆப்பிரிக்கா அதைவிட 17 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.

இதனால் மொகாலி பிட்ச் முழுக்க ஸ்பின்னுக்கு சாதகமாக உருமாற்றப்பட்டுவிட்டதாகவும், மும்பை பிட்ச் முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாக சர்ச்சை எழுந்ததால் மொகாலி பிட்ச் இவ்வாறு மாற்றப்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நமக்கு தெரியாது

நமக்கு தெரியாது

இதுகுறித்து அஸ்வின் கூறியதாவது: தென் ஆப்பிரிக்க நாட்டிலுள்ள ஜோகனஸ்பர்க்கிலோ, போர்ட்எலிசபெத்திலோ யார் பிட்ச் அமைத்தார்கள் என்பது இந்திய பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், இந்தியாவில் பிட்ச் சரியில்லை என்று கூறிக்கொண்டு, உடனே, தல்ஜித் சிங்கை குறை கூறிவிடுகிறோம்.

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

என்னைப்பொறுத்தளவில் பிட்ச்சில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் மோசமான ஷாட் மூலமாகத்தான் அவுட் ஆனார்கள்.

ஏதோ ஒரு சில..

ஏதோ ஒரு சில..

ஹசிம் ஆம்லாவை நான் அவுட் செய்தது மட்டும்தான் சிறந்த பந்து வீச்சின் மூலம் நடந்தது. மற்றவை அனைத்தும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் தவறுகளால் விழுந்த விக்கெட்டுகள்தான். முரளி விஜய் மட்டும்தான் தடுத்தாட முற்பட்டு அவுட் ஆனார். மற்றவர்கள் அடித்து ஆடும்போதுதான் அவுட் ஆனார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

யூடியூப்பில்

யூடியூப்பில்

உதாரணத்திற்கு, தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எல்கர், ஸ்வீப் ஷாட் அடிக்க முற்பட்டு அவுட் ஆனார். அவர் ஜோகனஸ்பர்க்கில் அப்படி ஷாட்டுகளை சிறப்பாக ஆடியதை முந்தைய தினம்தான், யூடியூப்பில் பார்த்தேன். எனவே அதேபோன்ற பந்தை வீசினேன். அவர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு மேலே எழும்பி கேட்ச் ஆனது.

ஏன் அப்படி சொன்னேன்?

ஏன் அப்படி சொன்னேன்?

எனவேதான், 'இது ஜோகனஸ்பர்க் கிடையாது' என்று எல்கரை பார்த்து நான் கூறினேன். அது ஸ்லெட்ஜிங் இல்லை. நமது நாட்டு பிட்ச் ஸ்பின்னுக்கு சாதகமானது என்பதைத்தான் அவ்வாறு கூறினேன். டிவில்லியர்சை அவுட் ஆக்குவது ஒன்றும் சிரமம் கிடையாது. அவருக்காக நான் சிறப்பு உத்தியில் எந்த பந்தையும் வீசுவதில்லை. இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

Story first published: Saturday, November 7, 2015, 10:29 [IST]
Other articles published on Nov 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+