ஆசிய வீரர் விருது போட்டியில் சச்சின், கங்குலி!

கங்குலி, சச்சின் தவிர இலங்கை வீரர்கள் மஹேலா ஜெயவர்த்தனே, குமார சங்கக்காரா, முத்தையா முரளீதரன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கென தனியாக விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் கிரிக்கெட், டுவென்டி 20 கிரிக்கெட் ஆகிய பிரிவுளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஸ்ட்ரால் ஆசிய கிரிக்கெட் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான விருது நாளை கராச்சியில் அறிவிக்கப்படவுள்ளது.
சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளருக்கான விருதுப் போட்டியில் யுவராஜ் சிங், கெளதம் கம்பீர், மிஸ்பா உல் ஹரக், யூனிஸ் கான், முகம்மது யூசுப், சோயிப் மாலிக், சனத் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ் உள்ளனர்.
இதுதவிர காஸ்ட்ரால் சிறந்த பாகிஸ்தான் வீரருக்கான விருதும் வழங்கப்படுகிறது. காஸ்ட்ரால் பாகிஸ்தான் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பழம்பெரும் வீரர் ஹனீப் முகம்மது பெறவுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:17 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications