For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தென்னாப்பிரிக்கா டி20 தொடர், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. 21 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 8ஆம் தேதி டர்பன் மைதானத்தில் முதல் டி20 போட்டியும், நவம்பர் 10ஆம் தேதி 2வது டி20 போட்டியும், நவம்பர் 13ஆம் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் 3வது டி20 போட்டியும் நடக்கவுள்ளது.

ind vs sa ramandeep singh suryakumar yadav

அதேபோல் ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் நம்பர் 15ஆம் தேதி 4வது டி20 போட்டியும் நடக்கவுள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் வங்கதேச டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் மீண்டும் முதன்மை விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய் மற்றும் அனுபவ வீரர் அக்சர் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்களாக விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள், ஆவேஷ் கான் ஆகிய மூவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பேட்ஸ்மேன்களில் திலக் வர்மா, ரமன்தீப் சிங், பேக் அப் விக்கெட் கீப்பராக ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியா ஏ அணிக்காக ரமன்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வங்கதேச டி20 தொடரில் சிறப்பாக ஆடிய மயங்க் யாதவ், ரியான் பராக் ஆகியோர் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். சிவம் துபே ஏற்கனவே காயமடைந்திருப்பதால், சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த டி20 தொடரில் ஆடிய நிதீஷ் குமார் ரெட்டிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, அக்சர் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், யாஷ் தயாள், ஆவேஷ் கான்

அதேபோல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் ஏராளமான இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா சில போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாற்று தொடக்க வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா, பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இளம் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியும் டெஸ்ட் அணியில் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர்களாக அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். குல்தீப் யாதவ் மருத்துவ சிகிச்சை பெறவுள்ளதால், தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் அக்சர் படேல், தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். பின்னர் நியூசிலாந்து தொடரில் தேர்வாகியுள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பயணிக்கவுள்ளனர்.

இந்திய டெஸ்ட் அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டம்ன்), பும்ரா (துணைக் கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யூ ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், அஸ்வின், ஜடேஜா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், நிதீஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

ரிசர்வ் வீரர்கள் பட்டிய: முகேஷ் குமார், கலீல் அஹ்மத் மற்றும் நவ்தீப் சைனி.

Story first published: Friday, October 25, 2024, 22:56 [IST]
Other articles published on Oct 25, 2024
English summary
IND vs SA: 15 Member Squad of the Indian team announced for the 4 Match T20 Series against South Africa - மயங்க் யாதவ், ரியான் பராக், சிவம் துபே காயம்.. தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+