Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பிஸியான ஸ்ரீ சாந்த்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரியாலிட்டி நடனநிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடி வருகிறார். இதன் மூலம் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார் ஸ்ரீசாந்த்.

கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், கடந்த ஐபிஎல் சீசனின் போது 'பெட்டிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள பிசிசிஐ நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டார்.

கிரிக்கெட்டை விட நடனத்திலும், மற்ற என்டர்டெயின்மென்டான விஷயங்களிலும் தான் அவர் அதிகமாக கவனம் செலுத்தினார். அது தொடர்பாக பல விமர்சனங்களும் எழுந்தன. இருந்தாலும் இப்போது அவற்றிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

நடன ரியாலிட்டி ஷோ

நடன ரியாலிட்டி ஷோ

பிரபல இந்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்று வரும் ஜலக் திக்கா ஜா எடனற நடனப் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி வருகிறார்.

மனைவி உற்சாகம்

மனைவி உற்சாகம்

ஸ்ரீசாந்த் நடனமாட அவருடைய மனைவி உற்சாகமூட்டினாராம். இதை அவரே கூறியுள்ளார். "எதுவும் நம்மைத் தடுத்து விட முடியாது. கிரிக்கெட் விளையாட்டை நான் இழந்துள்ளேன். வழக்கு முடியும் வரை பயிற்சியும் எடுக்க முடியாது. டிவி நிகழ்ச்சியில் ஆட வாய்ப்பு கிடைத்த போது, என்னை விட எனது குடும்பத்தாரும், நண்பர்களும்தான் என்னை சம்மதிக்க வைத்தனர் என்று கூறியுள்ளார்.

நடனம் ரொம்ப பிடிக்கும்

நடனம் ரொம்ப பிடிக்கும்

எனது மனைவி கூட உங்களுக்குத்தான் நடனம் என்றால் ரொம்ப பிடிக்குமே, ஏன் உங்களது திறமையை வெளிப்படுத்தக் கூடாது என்றார்கள். எனக்கு பிரேக் டான்ஸும் ஆடத் தெரியும். தெரு டான்ஸும் ஆடத் தெரியும்.

சிறந்த பயிற்சியாளர்

சிறந்த பயிற்சியாளர்

ஆனால், டிவி மேடையில் ஆடுவது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. பல விதமான நடனங்களை இதில் ஆட வேண்டியுள்ளது. ஆனாலும், எனக்கு சிறந்த பயிற்சியாளர் கிடைத்துள்ளார்," என்றார் ஸ்ரீசாந்த்.

சினிமாவிற்கு இசை

சினிமாவிற்கு இசை

நடனம் மட்டுமல்லாது இசையிலும் ஆர்வம் கொண்டவர் ஸ்ரீ சாந்த்.தற்போது தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'அன்புள்ள அழகே' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஸ்ரீ சாந்த். அதோடு ஒரு சில பாடல்களையும் எழுதுகிறாராம். இனி, சினிமாவிலும் ஸ்ரீசாந்தின் ஆட்டத்தைப் பார்க்கலாமாம்.

Story first published: Wednesday, June 11, 2014, 17:13 [IST]
Other articles published on Jun 11, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+