Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவர்களைப் பார்த்து கை தட்டிய கிண்டல் செய்த ஸ்ரீசாந்த்துக்கு அபராதம்

Sreesanth
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அடுத்தடுத்து 2 முறை நோ பால் கொடுத்த நடுவர்களைப் பார்த்து கை தட்டி கிண்டல் செய்ததற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு 20 சதவீதப் போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஜெய்ப்பூரில் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்ரீசாந்த் பந்து வீச்சை அடித்து நொறுக்கி ஆடினார் மைக்கல் லம்ப்.

இந்த நிலையில், 2 பந்துகள் தொடர்ந்து நோ பாலாகப் போட்டார் ஸ்ரீசாந்த். அதில் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார் லம்ப். இதனால் விரக்தியாகிப் போன ஸ்ரீசாந்த், நடுவர்களையும், லம்ப்பையும் பார்த்து கை தட்டி கிண்டல் செய்தார்.

ஸ்ரீசாந்தின் இந்த செயலை யுவராஜ் சிங் மைதானத்திலேயே கண்டித்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு நடத்தை விதியை மீறியதற்காக ஸ்ரீசாந்த்துக்கு 20 சதவீத போட்டக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 9000 டாலர் அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நடத்தை விதி 2.1.3ன் கீழ் ஸ்ரீசாந்த் செயல் நடத்தை விதியை மீறியதாகும். நடுவரின் முடிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பது தவறாகும். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+