விடுபட்ட பெயரை குறிப்பிட்ட சச்சின்.. கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்
Recommended Video

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் பிசிசிஐ-யால் தடை செய்யப்பட்டு இருக்கிறார்.
ஸ்ரீசாந்த் என்றாலே சர்ச்சை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, கிரிக்கெட் ஆட தடையும் பெற்ற அவர் தடைக்கு எதிராக போராடி வருகிறார்.
தற்போது பிரபல டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் பங்கேற்று உள்ளார். அதில் சச்சின் ஒரு பேட்டியில் தன்னை நினைவு கூர்ந்த சம்பவத்தை பற்றி கூறினார் ஸ்ரீசாந்த்.

உலகக்கோப்பையில் ஸ்ரீசாந்த்
2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ஸ்ரீசாந்த் பங்கேற்று இருந்தார். 2007 உலகக்கோப்பையில் ஸ்ரீசாந்த் பிடித்த மிஸ்பாவின் கேட்ச் இன்றளவிலும் பிரபலம்.

மேட்ச் பிக்ஸிங் புகார்
அதே போல 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் ஸ்ரீசாந்த் இடம் பெற்று இருந்தார். அதன் பின்னர் ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கி பிசிசிஐ-யால் தடை செய்யப்பட்டார்.

நினைவு கூர்ந்த சச்சின்
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் 2011 உலகக்கோப்பை வெற்றி பெற்ற அணியின் வீரர்கள் குறித்து சச்சினிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேட்டியாளர் ஸ்ரீசாந்த் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்கள் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் பற்றி சச்சின் கருத்தை கேட்டார். சச்சின் விடுபட்ட ஸ்ரீசாந்த் பெயரை தானாகவே நினைவு கூர்ந்து, ஸ்ரீசாந்த் உலகக்கோப்பை வென்ற அணியில் முக்கிய பங்காற்றினார் என கூறியுள்ளார்.

கண்ணீர் விட்டு அழுத ஸ்ரீசாந்த்
இதை கண்ட ஸ்ரீசாந்த் அப்போது கண்ணீர் விட்டு அழுததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் தான் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி மீண்டும் கிரிக்கெட் ஆடுவேன் எனவும் கூறினார்.


Click it and Unblock the Notifications