For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீசனில் மிகவும் குறைந்த ஸ்கோர்.... என்ன ஆச்சு ஹைதராபாத் அணிக்கு!

ஐபிஎல் 11வது சீசனில் மிகவும் குறைந்த ஸ்கோருக்கு ஹைதராபாத் அணி ஆட்டமிழந்தது. மும்பை அபாரமாக பந்து வீசு, 118 ரன்களுக்கு சுருட்டியது.

Recommended Video

IPL 2018:புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.

மும்பை: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் இந்த சீசனில் தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வென்று மற்ற அணிகளுக்கு கிலி ஏற்படுத்திய ஹைதராபாத் அணி, சீசனில் மிகவும் குறைவான ஸ்கோரை எடுத்துள்ளது.

ஐபிஎல் டி-20 கிரி்க்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 22 ஆட்டங்கள் முடிந்துள்ளன. 23வது ஆட்டத்தில் மும்பையும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

SRH bundled for lowest score in this IPL season

இந்த சீசனின் துவக்க ஆட்டங்களில் ஹைதராபாத் அணி அபாரமாக விளையாடியது. ராஜஸ்தான், மும்பை, கொல்கத்தா அணிகளை வென்ற ஹைதராபாத் அணி, பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளிடம் தோலவியடைந்தது.

தான் விளையாடிய 5ல் 4ல் தோல்வியடைந்த மும்பை அணியுடன் மோதுகிறது. மும்பையில் நடக்கும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 118 ரன்களுக்கு சுருண்டது.

இது இந்த சீசனில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்த ஸ்கோராகும். இதே ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்ததே மிகவும் குறைந்த ஸ்கோராக இருந்தது.

அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கும்போது, இது மோசமான ஸ்கோர் இல்லை. கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 49 ரன்கள் எடுத்ததே, மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

Story first published: Tuesday, April 24, 2018, 22:09 [IST]
Other articles published on Apr 24, 2018
English summary
Sunrisers hyderabad bundled for the lowest score in this IPL season. Mumbai bowlers bowled srh for 118 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+