Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முகமே செத்து போச்சு.. விட்டா அழுது இருப்பாரு போல.. ஐதராபாத் கேப்டன் மார்க்கரம் அதிருப்தி

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வெற்றியின் அருகே இருந்தது.

ஆனால் கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கே கே ஆர் அணிக்காக சிறப்பாக பந்துவீசி வெறும் மூன்றாம் ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது.

SRH captain Aiden Markram says tough loss to swallow vs kkr

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஹைதராபாத் அணி கேப்டன் ஏய்டன் மார்க்கரம், இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பெரும் பகுதியில் சிறப்பாகவே விளையாடினோம். ஆனால் நெருக்கடியான சமயத்தில் நாங்கள் தவறான முடிவை எடுத்து ஆட்டம் இழக்கிறோம். இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஹென்ரிச் கிளாசென் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

ஆனால் நான் தான் பேட்டிங் செய்யும்போது கொஞ்சம் தடுமாறினேன். எனினும் என் மீது நெருக்கடி ஏற்படாமல் கிளாசென் பார்த்துக் கொண்டார். எங்களுடைய பார்ட்னர்ஷிப் இன்னும் கொஞ்ச நேரம் நிலைத்திருந்திருக்க வேண்டும்.இதுபோன்ற பார்ட்னர்ஷிப் தான் உங்களுக்கு ஆட்டத்தை வென்று கொடுக்கும். இன்றைய ஆட்டத்திலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள்.

SRH captain Aiden Markram says tough loss to swallow vs kkr

எங்களுடைய வீரர்கள் பில்டிங்கிலும் டாப் கிளாஸ் ஆக இருந்தார்கள். இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினாலும், எங்களால் வெற்றி கோட்டை தாண்ட முடியவில்லை. சில நேரத்தில் அதிரடியாக விளையாடுகிறேன் என்று தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள். எந்த சூழலில் எந்த சாட் ஆட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு அனுபவம் இருந்தால் மட்டுமே தெரிய வரும்.

இருப்பினும் எங்கள் அணி வீரர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். எஞ்சிய நான்கு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழல் எங்கள் வீரர்களும் இருக்கும் திறமையை வெளிக்கொண்டுவரும் என நான் நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் எங்களுக்கு கிடைத்த உத்வேகத்தை நாங்கள் அடுத்த போட்டிக்கு கொண்டு செல்வோம் என ஏய்டம் மார்க்கரம் கூறினார்.

Story first published: Thursday, May 4, 2023, 23:51 [IST]
Other articles published on May 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+