கேதர் ஜாதவக்கு எதுக்குப்பா 2 கோடி.... என்ன வியூகம் வகுக்கிறது ஐதராபாத் அணி? விமர்சிக்கும் ரசிகர்கள்
சென்னை: கேதர் ஜாதவை ஏலத்தில் எடுத்து 2021 ஐபிஎல்-ல் புதிய வியூகத்தை வகுத்துள்ளது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி.
ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் மிகவும் வலுவான அணிகளில் ஒன்று. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தாண்டு பெரும்பாலான வீரர்களை விடுவிக்காமல் இருந்த ஐதராபாத் அணி கேதர் ஜாதவை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்து புதிய வியூகம் வகுத்துள்ளது.

விடுவித்த சென்னை
சென்னை அணியில் இருந்த கேதர் ஜாதவ் மோசமான ஆட்டம் காரணமாக இந்தாண்டு விடுவிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதற்கு முன்பு 2019 ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 162 ரன்களே எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஐதரபாத்
இந்தாண்டு ஏலத்தில் முதல் சுற்றில் கேதர் ஜாதவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இருப்பினும், இரண்டாவது ரவுண்டில் கேதர் ஜாதவை அடிப்படை விலையான 2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

என்ன வியூகம்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே நல்ல ஃபார்மில் உள்ளதால் பெரியளவில் வீரர்களை விடுவிக்கவில்லை. இதனால் இந்தாண்டு 3 வீரர்களை மட்டும் ஏலத்தில் எடுத்தடு. அதன்படி கேதர் ஜாதவ் 2 கோடி, வங்கதேச வீரர் முஷ்திவிசூர் ரஹ்மான் 1.5 கோடி, ஜே.சுசித் ரூ.30 லட்சத்திற்கு எடுத்துள்ளது.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
கேப்டன் டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, சித்தல்த் அஹ்மத் விஜய் சங்கர், விருத்திமான் சாஹா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ் , ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்


Click it and Unblock the Notifications