ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணி விளையாடிய 7 போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று தற்போது நான்கு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளது.
டெல்லி அணியை பொறுத்தவரை தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள்.
145 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் ஐதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது குறித்து பேசிய கேப்டன் மார்க்கரம், ஐதராபாத் வீரர்களை வெளுத்து வாங்கினார். இதில் நாங்கள் இன்றைய ஆட்டத்திலும் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் வீரர்கள் இருக்கிறார்கள். ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் இருக்கும் அணி போல் நாங்கள் தெரிகிறோம். இது மிகவும் துரதிஷ்டவசமானது. ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும்? எப்படி சேச்சிங் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
ஒரு அணியாக சுதந்திரமாக களத்தில் செயல்படுங்கள். அதுதான் நம்மை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றும். நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் களத்தில் இருக்கும் வீரர்கள் தான் அதை செயல்படுத்த வேண்டும். ஆக்ரோஷமாக களத்தில் விளையாட வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். செய்கின்ற தவறை திருத்திக் கொண்டால் தான் இரவில் நிம்மதியான தூக்கம் வரும். ஆனால் இன்று நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நோக்கத்திலே இல்லாத போல் தெரிந்தது.
எங்கள் அணியில் நல்ல வீரர்கள் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் அடித்த ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதது தோல்வியை எங்களுக்கு தருகிறது. நிச்சயமாக எங்கள் பேட்ஸ்மேன்கள் தங்களுடைய ஆட்டத்தை முன்னேற்ற வேண்டும். எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் நினைத்து பெருமைப்படுகிறேன்.
நாங்கள் வகுத்த திட்டங்களை களத்தில் அவர்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தினர்.ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் செய்த பணிக்கு எங்கள் பேட்ஸ்மேன்களால் கைமாறாக எதுவும் செய்ய முடியவில்லை. எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் தோற்பதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று மார்க்கம் கூறியுள்ளார்.