For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என் விஸ்வாசம் அம்பானிக்குடா.. காவ்யா மாறனுக்கு துரோகம் செய்த இஷான் கிஷன்.. வெளுக்கும் மீம்ஸ்!

ஐதராபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஐதராபாத் அணியின் பிளே ஆஃப் சான்ஸ் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் ஆட்டோ ஓட்டுநராக வரும் வடிவேலு, "மணி என்ன 6.. 6 மணிக்கு மேல வண்டி ஓடாது" என்று குடிக்க சென்றுவிடுவார்.. அதில் வரும் வடிவேலுவாக இஷான் கிஷனை மாற்றி, "முதல் போட்டிக்கு அப்புறம் வண்டி ஓடாது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இன்ஜின் புகைந்து 6 மாசமாச்சு மொமண்ட்.

ipl 2025 memes Ishan Kishan Kavya Maran

வடசென்னை படத்தில் செந்திலை கொலை செய்ய முயற்சிக்கும் தனுஷ், பின்னால் திரும்பி "என் விஸ்வாசம் குணாக்குடா" என்று ட்விஸ்ட் கொடுப்பார். அதில் வரும் செந்திலின் சிஷ்யனாக ஐதராபாத் அணியையும், இஷான் கிஷனாக தனுஷையும் மாற்றி, "நடுவர் அவுட் கொடுக்காமலேயே நடந்து சென்று, என் விஸ்வாசம் மும்பை இந்தியன்ஸ் அணிக்குடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அன்பானி இறங்கிட்டான் மாமா மொமண்ட்.

ipl 2025 memes Ishan Kishan Kavya Maran

கண்ணும் கண்ணும் படத்தில் இறந்து போன முனியாண்டி தனது உடம்பில் இருப்பதாக வடிவேலு ஊரை ஏமாற்றுவார். அப்போது அவரது மனைவி ஒருவரிடம், "இவங்க அப்பன் முனியாண்டி வந்திருக்கானாம்.. அதான் பார்க்க போகிறேன்" என்பார். அதில் வரும் பெண்ணாக காவ்யா மாறனையும், வடிவேலுவாக இஷான் கிஷனையும் மாற்றி, "டிஆர்எஸ் கேட்காமல் ஒருத்தன் விக்கெட்டை கிப்ட் கொடுத்து வந்துருக்கான்.. அவன பார்க்க போறேன்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிகிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

ipl 2025 memes Ishan Kishan Kavya Maran

வடசென்னை படத்தில் தனுஷ் ஆண்ட்ரியாவிடம், "ஜெயிக்கிறோமோ.. தோற்கிறோமோ.. சண்ட செய்யணும்" என்பார். அதில் வரும் தனுஷாக ஐதராபாத் அணியின் கிளாசனை மாற்றி, "ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ.. முதல்ல சண்ட செய்யணும்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கெத்து.

ipl 2025 memes Ishan Kishan Kavya Maran

நாட்டாமை படத்தில் கவுண்டமணி பெண் பார்க்க சென்ற வீட்டாரிடம், "யாரா இவன்.. நான் இவ்வளவு கேவலமா திட்டிட்டு இருக்கேன்.. ஒருத்தன் உட்கார்ந்து மிக்சர் தின்னுட்டு இருக்கான்" என்று நக்கல் செய்வார். அதில் வரும் கவுண்டமணியை ஐதராபாத் அணியாகவும், மிக்சர் சாப்பிடுவோரை சிஎஸ்கே அணியாகவும் மாற்றி, "யாரா இவன்.. நான் இவ்வளவு கேவலமா விளையாண்டும் எனக்கு கீழ இருக்கான்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கோவப்படாதீங்க மை சன் மொமண்ட்.

ipl 2025 memes Ishan Kishan Kavya Maran
ipl 2025 memes Ishan Kishan Kavya Maran
Story first published: Thursday, April 24, 2025, 10:30 [IST]
Other articles published on Apr 24, 2025
English summary
SRH vs MI: Fantastic memes from social media after Ishan Kishan walks out when umpire didn't even given out against Mumbai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+