Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடுப்பான காவ்யா மாறன்.. ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாரா கம்மின்ஸ்?

ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகமின்றி காணப்படுகிறார். இதனிடையே ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ், ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தியது. இம்முறையும் நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஐதராபாத் அணியால் அந்நிய மண்ணில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை. இதுவரை சொந்த மண்ணில் ஆடிய 2 போட்டிகளில் மட்டுமே ஐதராபாத் அணி வென்றிருக்கிறது.

SRH vs MI Is this True that SRH Captain Pat Cummins leaving India after the Continuous loss in the IPL 2025

இங்கிருந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், ஐதராபாத் அணி எதிர் வரும் 7 போட்டிகளில் 6ல் வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சோகமாக வலம் வருகிறார். இதனிடையே ஐதராபாத் அணி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து கம்மின்ஸ் பாதியில் விலகுவதாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக பேட் கம்மின்ஸ் மனைவி பெக்கி, குட் பை இந்தியா.. இந்த அழகான நாட்டிற்கு வருவது எப்போதும் மகிழ்ச்சி என்று பதிவிட்டிருந்தார். அவருடன் பேட் கம்மின்ஸ் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால், பேட் கம்மின்ஸ்-ம் விலகுவதாக வதந்தி பரவியது.

இதுதொடர்பாக விசாரிக்கையில், பேட் கம்மின்ஸ் தனது மனைவியை மும்பை விமான நிலையத்தில் இறக்கிவிட சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரிய வந்தது. இதனால் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரின் முழு சீசனிலும் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே முழு சீசனிலும் விளையாடுவேன் என்ற உறுதியை கம்மின்ஸ் அளித்துள்ளார்.

இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. அதேபோல் அடுத்தடுத்து ஐதராபாத் அணி சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் விளையாட இருப்பதால், கம்பேக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 19, 2025, 13:13 [IST]
Other articles published on Apr 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+