Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - பிளேயிங் 11, டாஸ்

ஹைதராபாத் : 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். கடந்த சில போட்டிகளில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். எங்களால் நல்ல ஸ்கோரை அடிக்க முடியும். நாங்கள் ஆக்ரோஷமான அதிரடி கிரிக்கெட்டை ஆட விரும்புகிறோம். அதுதான் எங்கள் மனநிலை. நாங்கள் பவர் பிளேவில் சிறப்பான ரெக்கார்டை வைத்திருக்கவில்லை ஆனால் அது குறித்து இப்போது நாங்கள் சிந்திக்கவில்லை."

SRH vs PBKS Playing XI and Toss IPL 2025 Captains Statements

"ஒவ்வொருவரும் அவர்களின் கிரிக்கெட்டை ஆட முயற்சி செய்கிறோம். எங்களின் உள்ளுணர்வை நம்புகிறோம். மீண்டும் மீண்டும் அதை நாங்கள் செய்ய முயற்சி செய்கிறோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை" என்று சொன்னார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், "நாங்கள் எத்தனை பெரிய இலக்கையும் சேசிங் செய்வோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் எதிர்பார்த்த சிறந்த துவக்கம் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக பயிற்சி செய்து வருகிறோம்."
"ஒவ்வொருவரும் நல்ல மனநிலையில் தான் இருக்கிறோம். ஆனால் சில போட்டிகளை நாங்கள் தொடர்ந்து தோற்று இருக்கிறோம். அது நல்ல விஷயம் அல்ல. எங்கள் அணியில் கமிந்து மெண்டிஸ் நீக்கப்பட்டு இஷான் மலிங்கா சேர்க்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

இரு அணிகளின் பிளேயிங் 11 -

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் 11): ப்ரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நெஹால் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் 11): அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகெட் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, இஷான் மலிங்கா

பஞ்சாப் கிங்ஸ் இம்பேக்ட் வீரர்கள்: சூர்யான்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், பிரவீன் துபே, வைஷாக் விஜய் குமார், ஹர்ப்ரீத் பிரார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பேக்ட் வீரர்கள்: அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர், ஜெய்தேவ் உனட்கட்

Story first published: Saturday, April 12, 2025, 19:41 [IST]
Other articles published on Apr 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+