For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யப்பா.. இது என்ன டெஸ்ட் போட்டியா.. இல்லை டி20யா? பெங்களூர் அணியை அடக்கி.. சிக்கனம் காட்டிய நபி!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி பரிதாபமாக 118 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வரும் ஆப்கன் வீரர் முஹமது நபி மிக அருமையாக பந்து வீசினார். அவர் பந்துவீச்சை பார்க்கும் போது இது டி20யா? இல்லை டெஸ்ட் போட்டியா? என யோசிக்க வைத்தார்.

முக்கியக் காரணம்

முக்கியக் காரணம்

மேலும், இந்த போட்டியில் பெங்களூர் அணி பரிதாபமாக தோல்வி அடைய முக்கியக் காரணமாக விளங்கியவர் இவர் தான். ஹைதராபாத் அணிக்கு இந்தப் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார், இரண்டாவது ஓவரை நபியிடம் கொடுத்தார்.

டி வில்லியர்ஸ் பௌல்டு அவுட்

டி வில்லியர்ஸ் பௌல்டு அவுட்

அந்த ஓவரின் கடைசி பந்தில் பார்த்திவ் பட்டேல் விக்கெட்டை கைப்பற்றினார் நபி. நான்காவது ஓவரில் ஹெட்மையர், டி வில்லியர்ஸ் என 2 விக்கெட்களை சாய்த்தார். அதிலும் டி வில்லியர்ஸ் பந்தை கணிக்கத் தவறி பௌல்டு அவுட் ஆனார்.

4 விக்கெட்கள்

4 விக்கெட்கள்

ஆறாவது ஓவரில் விக்கெட் எடுக்காத நபி, எட்டாவது ஓவரில் ஷிவம் துபேவை வீழ்த்தினார். நான்கு ஓவர்களில் 4 விக்கெட்கள், 11 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். இதில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ தவற விட்ட 4 ரன் பைஸ் சேரவில்லை.

டெஸ்ட் பந்துவீச்சு

டெஸ்ட் பந்துவீச்சு

அதை சேர்த்தால் கூட நான்கு ஓவர்களில் 15 ரன்கள் என்பது டி20யில் மிக, மிகக் குறைவான ரன்களே. டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர் ஒருவரின் ஸ்கோர்கார்டை பார்ப்பது போலவே இருந்தது இந்தப் போட்டியில் நபியின் பந்துவீச்சு.

சம்மட்டி அடி

சம்மட்டி அடி

ஓவருக்கு 3 ரன்கள் மட்டுமே கொடுத்து. 4 விக்கெட்கள் வீழ்த்திய முஹமது நபி, 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணியை நியாயமான ஸ்கோரை கூட எட்டவிடாமல் சம்மட்டி அடியாக அடித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

Story first published: Monday, April 1, 2019, 9:54 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
SRH vs RCB : Mohammad Nabi bowled like a test match against RCB
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+