Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ஆளைத் தேடி பிட்ஸா கொடுத்துட்டு போற வரை வெயிட் பண்ணுங்க.. போட்டியை நிறுத்திய சஞ்சு சாம்சன்!

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் - ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

போட்டியின் இடையே பார்வையாளர் ஒருவருக்கு, பிட்ஸா எடுத்து வந்தவரால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.

சஞ்சு சாம்சன் அதிரடி

சஞ்சு சாம்சன் அதிரடி

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து வந்தார். அவர் 55 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். இந்த இன்னிங்க்ஸக்கு இடையே அவர் 44 ரன்கள் அடித்து இருந்த போது, தான் அந்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.

கவனம் சிதறியது

கவனம் சிதறியது

12வது ஓவரை விஜய் ஷங்கர் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை வீச ஓடி வந்த விஜயை தடுத்து நிறுத்தினார் சாம்சன். தனக்கு எதிரில் பார்வையாளர்கள் பகுதியில் ஒருவர் நடந்து சென்றதால், கவனம் சிதறியது என்பதற்காக சாம்சன் இப்படி தடுத்துள்ளார். இது எல்லா பேட்ஸ்மேனும் செய்வது தான்.

அங்கும் இங்கும்..

ஆனால், அந்த கவனச் சிதறலை ஏற்படுத்தியது யார் என்பது தான் இதில் வேடிக்கை. பார்வையாளர்களில் யாரோ ஒருவர் பிட்ஸா ஆர்டர் செய்துள்ளார். பிட்ஸாவை எடுத்து வந்த நபர் ஆர்டர் கொடுத்தவர் யார் என அங்கும் இங்கும், நடந்து தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார்.

நிறுத்தி நிதானமாக..

நிறுத்தி நிதானமாக..

அந்த நபர் கையில் பையை வைத்துக் கொண்டு பொறுமையாக ஆர்டர் கொடுத்தவரை தேடிக் கொண்டிருக்க, சாம்சன் கவனம் இழந்து பந்துவீச்சை நிறுத்தினார். ஆனால், அந்த பிட்ஸா கொடுக்க வந்தவருக்கு இதெல்லாம் அப்போது தெரியவில்லை. அவர் நிறுத்தி நிதானமாக தேடிக் கொண்டிருந்தார்.

மேட்சையே நிப்பாட்டுறீங்களே!

மேட்சையே நிப்பாட்டுறீங்களே!

"ஏன்பா.. நிறுத்தி நிதானமா பிட்ஸா கொடுத்துட்டு இருந்தா எப்படி? ஒரு பிட்ஸாவுக்காக மேட்சையே நிப்பாட்டுறீங்களே" என ரசிகர்கள் புலம்பினர். அந்த நிகழ்வு சாம்சன் கவனத்தை சிதற வைத்தாலும், நல்ல வேளையாக அதன் பின்னும் சாம்சன் அதே பார்மில் அதிரடியாக ஆடி சதத்தை எட்டினார்.

Story first published: Saturday, March 30, 2019, 13:29 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+