Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர், ரஷித் கான் நல்லாத்தான் ஆடினாங்க.. ஆனா நம்ம விஜய் ஷங்கர் ஆடின ஆட்டத்தை மறந்துடாதீங்க!

Recommended Video

IPL 2019: Vijay Shankar vs Rajasthan | விஜய ஷங்கரின் திருப்புமுனையான ஆட்டம்- வீடியோ

ஹைதராபாத் : 2019 ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி, சாதனை வெற்றி பெற்றது. ஹைதராபாத் வெற்றியில் விஜய் ஷங்கரின் பங்களிப்பும் அதிகம்.

பேசப்படவில்லை

பேசப்படவில்லை

இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு டேவிட் வார்னரின் அதிரடி, ரஷித் கானின் பந்துவீச்சு - பேட்டிங் ஆகியவை காரணம் என கூறப்பட்டாலும், விஜய் ஷங்கரின் பேட்டிங்கும் மிக முக்கிய காரணம். அது அதிகம் பேசப்படவில்லை.

வார்னர் - பேர்ஸ்டோ

வார்னர் - பேர்ஸ்டோ

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் 102, ரஹானே 70 ரன்கள் அடிக்க அந்த அணி 198 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியின் வார்னர் - பேர்ஸ்டோ ஜோடி துவக்கம் முதல் செம காட்டு காட்டினர். இவர்கள் 9.4 ஓவர்களில் 110 ரன்கள் குவித்தனர்.

ரன் விகிதம்

ரன் விகிதம்

வார்னர் 69, பேர்ஸ்டோ 45 ரன்கள் குவித்து வெளியேறினர். இவர்கள் இருவரும் வெளியேறிய போது ரன் விகிதம் ஓவருக்கு 10.63 ஆக இருந்தது. ஓவருக்கு 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது கேன் வில்லியம்சன் - விஜய் ஷங்கர் ஆடி வந்தனர்.

விஜய் ஷங்கர் அதிரடி

விஜய் ஷங்கர் அதிரடி

விஜய் ஷங்கர் 12, 14 மற்றும் 15வது ஓவர்களில் மொத்தமாக நான்கு பவுண்டரி அடித்தார். இதில் 1 ஃபோர், 3 சிக்ஸர்கள் அடங்கும். 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த விஜய் ஷங்கர் ஆட்டமிழக்கும் போது ரன் தேவை ஓவருக்கு 7 ரன்களை ஒட்டி இருந்தது.

ஸ்ட்ரைக் ரேட் அதிகம்

ஸ்ட்ரைக் ரேட் அதிகம்

நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தார் விஜய் ஷங்கர். இந்த போட்டியில் அனைத்து பேட்ஸ்மேன்களிலும் விஜய் ஷங்கரின் ஸ்ட்ரைக் ரேட் ஆன 233 தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 30, 2019, 12:27 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+