Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செஞ்சுரி அடிச்சு ரெக்கார்டு பண்ணா.. அதை இப்படி நாசம் பண்ணிட்டீங்களே.. வார்னரிடம் புலம்பிய சாம்சன்!!

ஹைதராபாத் : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் பெரிய இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் அணியை, வீழ்த்தி வெற்றி வாகை சூடியது ஹைதராபாத் அணி.

அந்தப் போட்டியில் 2019 ஐபிஎல் தொடரின் முதல் சதம் அடித்து உற்சாகத்தில் இருந்தார் சஞ்சு சாம்சன். ஆனால், போட்டியின் முடிவில் தன் அணி தோற்றதால் அதை கொண்டாட முடியாத நிலையில் இருந்தார்.

வார்னர் அதிரடி

வார்னர் அதிரடி

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை 19வது ஓவரிலேயே எட்டியது ஹைதராபாத். அதற்கு முக்கிய காரணம் டேவிட் வார்னர் கொடுத்த அதிரடி துவக்கம் தான் காரணம். அவர் 37 பந்துகளில் 69 ரன்கள் அடித்து அணியின் ரன் ரேட்டை 11-ஐ ஒட்டி வைத்திருக்க உதவினார்.

ஹைதராபாத் வெற்றி

ஹைதராபாத் வெற்றி

அதன் பின் வந்த வீரர்களும் அதே ரன் ரேட்டை தொடர ஹைதராபாத் அணி 19வது ஓவரில் இமாலய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சாம்சன் 55 பந்துகளில் அடித்த 102 ரன்கள் வீணானது.

நாசமாக்கி விட்டீர்கள்

நாசமாக்கி விட்டீர்கள்

டேவிட் வார்னர் - சஞ்சு சாம்சன் இருவரும் போட்டி முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டனர். அப்போது சஞ்சு சாம்சன், நீங்கள் என் நாளை நாசமாக்கி விட்டீர்கள். என் சதம், நீங்கள் அடித்த அடிக்கு ஈடாகவில்லை. பவர்பிளேயில் நீங்கள் அடித்த அடியிலேயே நாங்கள் போட்டியை இழந்து விட்டோம்" எனக் கூறினார்.

மனக் குமுறல்

மனக் குமுறல்

மேலும், "உங்களை மாதிரி ஒருவரை எதிரணியில் இருந்தால், நாங்கள் 250 ரன்கள் அடித்தால்தான் வெற்றி பெற முடியும்" என வேடிக்கையாக குறிப்பிட்ட சஞ்சு சாம்சன், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது சதம் அடித்து சாதனை செய்தார். இப்படி ஒரு சாதனை செய்தும் அதைக் கொண்டாட முடியவில்லையே என்ற தன் மனக் குமுறலை, அதற்கு காரணமான வார்னரிடமே கொட்டியுள்ளார் சாம்சன்.

அதிக சதம் பட்டியல்

அதிக சதம் பட்டியல்

இந்திய வீரர்களில் இதுவரை அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் கோலி இருக்கிறார். அவர் நான்கு சதம் அடித்துள்ளார். அதற்கடுத்து முரளி விஜய், சேவாக் இரண்டு சதங்கள் அடித்துள்ளனர். அவர்களுடன் மூன்றாவது வீரராக சஞ்சு சாம்சன் இரண்டு சதங்களுடன் இணைந்துள்ளார்.

Story first published: Saturday, March 30, 2019, 20:01 [IST]
Other articles published on Mar 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+