Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டார்கெட்டிற்காக தனி "சபதம்".. இந்திய வீரர்களின் ஈகோவை தொட்ட இலங்கை.. 2வது போட்டியில் பரபரப்பு

கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், எப்படியும் 330 ரன்களுக்கும் மேல் குவிக்க வேண்டும் என்பதில் இலங்கை உறுதியாக உள்ளதாம்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று 2வது ஒருநாள் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்

 தெளிவான பார்ட்னர்ஷிப்

தெளிவான பார்ட்னர்ஷிப்

வழக்கம் போல் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பனுகா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சாஹர் ஓவரில் பனுகா கொடுத்த கேட்சை செகண்ட் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த மணீஷ் பாண்டே தவறவிட்டார். பாண்டே கேட்ச் விட்டதன் விளைவை, சாஹர் தான் வீசிய அடுத்த ஓவரிலேயே அனுபவித்தார். ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசப்பட்டது. முதல் பவர்பிளேயில் மட்டும் அந்த அணி, 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது. 10 ஓவர்களுக்குள் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரை விளாசினர்.

 நெருக்கடி தர முடிவு

நெருக்கடி தர முடிவு

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே, டாஸ் வென்றால் பேட்டிங் தேர்வு என்பதிலும், 330 ரன்களுக்கு மேல்.. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் 350 ரன்கள் அடிக்க வேண்டும் என்றும் இலங்கை அணி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ஏனெனில், கொழும்பு பிட்ச் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. நல்ல ஸ்கோரை ரெஜிஸ்டர் செய்யும் பட்சத்தில், ஸ்பின் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பதே வியூகமாம்

 பேக் டூ பேக் விக்கெட்ஸ்

பேக் டூ பேக் விக்கெட்ஸ்

அதற்கேற்றாற் போல், இப்போது இலங்கை முதல் 10 ஓவர்களை விக்கெட் இழப்பின்றி மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறது. இந்தியாவின் பேஸ் மற்றும் ஸ்பின் என இரண்டு பந்துவீச்சையும் இலங்கை ஓப்பனர்கள் சிறப்பாக கையாண்டனர். எனினும், யுவேந்திர சாஹல் வீசிய 13.2வது ஓவரில், மினோத் பனுகா 36 ரன்கள் எடுத்திருந்த போது, மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரின் அடுத்த பந்தில், ராஜபக்ஷே 0 ரன்னில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 உறுதியான ஸ்டிராடஜி

உறுதியான ஸ்டிராடஜி

விக்கெட்டுக்களை இழந்தாலும், சூழலுக்கு ஏற்ப விளையாட்டு அணுகுமுறையை மாற்றி எப்படியும் 330 ரன்களுக்கும் மேல் இந்த ஈஸியான ரெட் டிராக்கில் அடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும், இவர்களது உறுதியான ஸ்டிராடஜியை பார்த்தால், எப்படியும் 280 ரன்கள் நெருங்கிவிடுவார்கள் என்று தெரிகிறது.

Story first published: Tuesday, July 20, 2021, 17:02 [IST]
Other articles published on Jul 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+