Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ பாவம்! நிதி சிக்கலில் இலங்கை வாரியம்.. தலைவரை கெஞ்சவிட்ட வீரர்கள்.. காப்பாற்ற வந்த இந்திய ஏ அணி!

கொழும்பு: இந்திய அணியுடனான தொடரின் மூலம் இலங்கை வாரியம் சம்பாதிக்க கூடிய தொகையின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

நிதி சிக்கல்.. வீரர்களிடம் கோரிக்கை வைத்த Srilanka Cricket Board தலைவர்..Ind vs Sl தொடர் தான் வழி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி அங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

வரும் ஜூலை 13ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஜூலை 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இளம் வீரர்களை கொண்ட 2வது அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணைகேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடர் தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ள சூழலில் இலங்கை முன்னாள் வீரர் அர்ஜுனா ரணதுங்கா இந்திய அணியை இழிவுப்படுத்தும் வகையில் பேசினார்.

கோடிகளில் வருவாய்

கோடிகளில் வருவாய்

இந்தியாவின் 2ம் தர அணியுடன் விளையாடுவது இலங்கைக்கு அசிங்கம் எனக்கூறினார். இந்நிலையில் இந்தியாவின் இரண்டாம் தர அணி தான் தற்போது இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உள்ளது. தொடர் தோல்விகள், கொரோனா பிரச்னை என கடும் நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை வாரியம், இந்தியாவுடனான போட்டி மூலம் ரூ. 89.7 கோடி வரை வருவாய் ஈட்டவுள்ளது.

மோசமான சூழல்

மோசமான சூழல்

இதுகுறித்து பேசியுள்ள இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷாமி சில்வா, முதலில் இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் பிசிசிஐ-டம் கோரிக்கை வைத்து 6 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணமாக மாற்றினோம். ஏனென்றால் கூடுதலாக 3 போட்டிகள் நடத்துவதன் மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வருவாய் கிடைக்கும்.

வீரர்களுக்கு வேண்டுகோள்

வீரர்களுக்கு வேண்டுகோள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணி விளையாடவிருந்த பல தொடர்கள் கைவிடப்பட்டு விட்டன. எனினும் நாங்கள் எந்தவொரு வீரருக்கும் மாத ஊதியத்தை குறைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும் குறைக்கப்படவில்லை. எனவே இந்த இக்கட்டான சூழலில் வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை முன்னேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Thursday, July 8, 2021, 22:12 [IST]
Other articles published on Jul 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+