For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனிதத்தன்மையற்ற செயல்.. இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டு வீரர்கள்

Recommended Video

Sportsmen slams lanka issue | இலங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த விளையாட்டு வீரர்கள்

மும்பை : இலங்கை நாட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து விளையாட்டு வீரர்கள் தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகை தினமான ஏப்ரல் 21 அன்று பல்வேறு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். அதனால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

அதிர்ச்சி

நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். அதனால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மனிதத்தன்மை அற்ற செயல்

சுரேஷ் ரெய்னா, "இலங்கை தாக்குதல் குறித்து அறிந்து அதிர்ந்து போயுள்ளேன். இது மனிதத்தன்மை அற்ற செயல்" என குறிப்பிட்டுள்ளார்.

கடினமான நேரம்

விவிஎஸ் லக்ஷ்மன், "இலங்கையில் நடந்த கொடூர தாக்குதலால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன். இலங்கை மக்களுக்கு இது கடினமான நேரம். அவர்களுக்கு என் வேண்டுதல்கள்" என கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள் கண்டனம்

இந்திய வீரர்கள் தவான், யுவராஜ் சிங், முஹம்மது கைஃப், ஹர்பஜன் சிங், கே எல் ராகுல், ஆகாஷ் சோப்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பலர் இலங்கை தாக்குதலுக்கு கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளனர்.

Story first published: Sunday, April 21, 2019, 14:52 [IST]
Other articles published on Apr 21, 2019
English summary
Sri Lanka Bomb Blasts - Indian sports personalities condemns the terror act
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X