Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் டீம்ல இருந்தே ஆகணும்.. ஓய்வு குறித்த அறிவிப்பு... பல்டி அடித்த இலங்கை கேப்டன்!

கொழும்பு : தன்னுடைய ரிடையர்மெண்ட் குறித்து தான் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாகவும், அணியில் இன்னும் இரு வருடங்கள் நீடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை கேப்டன் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 20-20 உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வெடுக்க போவதாக மலிங்கா தெரிவித்திருந்தார்.

36 வயதான இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, தற்போது, தன்னுடைய ஓய்வை மேலும் இரண்டு வருடங்களுக்கு பிறகு மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

 இலங்கை அணியின் கேப்டன்

இலங்கை அணியின் கேப்டன்

இலங்கை அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர். இவரது வேகப்பந்து வீச்சு, சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் அளித்துள்ளது.

 10 டி20 போட்டிகளில் ஒரு வெற்றி

10 டி20 போட்டிகளில் ஒரு வெற்றி

சர்வதேச அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தாலும் மலிங்கா, தன்னுடைய அணியை பலப்படுத்தும் முயற்சியில் சரிவர பிரகாசிக்கவில்லை. இவர் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற 10 சர்வதேச டி20 போட்டிகளில் இலங்கை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

 20-20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு

20-20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு

இந்நிலையில் அடுத்த ஆண்டு அக்டோர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20-20 உலக கோப்பை தொடருக்கு பிறகு தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக கடந்த மார்ச் மாதத்தில் அவர் அறிவித்திருந்தார்.

 பல்டி அடித்த மலிங்கா

பல்டி அடித்த மலிங்கா

இந்நிலையில், தன்னுடைய ஓய்வு குறித்து தான் மறுபரிசீலனை செய்ய விரும்புவதாகவும் அணியில் இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து விளையாட விருப்பம்

தொடர்ந்து விளையாட விருப்பம்

இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், அதை உடனடியாக பெறுவது என்பது இயலாத காரியம். நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் இதை கவனத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"நான் அணியில் இருந்தால் செய்வேன்"

இளைஞர்களின் தேவையை அறிந்து அவர்களின் விருப்பத்தை ர்த்தி செய்ய வேண்டும். இதை அணியில் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் மலிங்கா தெரிவித்துள்ளார். இதற்கு தான் தொடர்ந்து அணியில் விளையாட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Wednesday, November 20, 2019, 18:11 [IST]
Other articles published on Nov 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+