Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேர்.. புகழ்.. கெத்து.. எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சாச்சு - ஜீரணிக்க முடியாத இலங்கையின் தோல்வி

கொழும்பு: செல்லும் இடமெல்லாம் சிறப்பித்துவிட்டு வரும் இலங்கை அணி, இப்போது இங்கிலாந்தை மகிழ்ச்சி அடையச் செய்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறது.

இங்கிலாந்தில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இலங்கை அணி, ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் வெறுங்கையை வீசி வந்திருக்கிறது.

டி20 தொடரில் வாஷ் அவுட், ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் என்று இங்கிலாந்து ரசிகர்கள் குஷிப்படுத்திவிட்டு திரும்பியுள்ளது.

 அன்று ராஜா, இன்று?

அன்று ராஜா, இன்று?

கிரிக்கெட் என்பது கால்பந்து, டென்னிஸ், போன்றவற்றை கம்பேர் செய்கையில் மிகச் சிறிய விளையாட்டு உலகமாகும். நமக்கு வேண்டுமானால், கிரிக்கெட் பிஸ்னஸ் பெரியளவில் தெரிந்தாலும், கால்பந்தோடு ஒப்பிட்டால் தூசி தான். அப்படிப்பட்ட சிறிய விளையாட்டு உலகத்தில் டாப் 10 அணிகள் என்று ஒரு பத்து அணிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக வலம் வந்த இலங்கை அணி, இன்று அப்பட்டியலில் இருக்கிறதா என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.

 மோசமான சாதனை

மோசமான சாதனை

பவுலின், பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்ஷிப் என்று அனைத்து செக்டரிலும் தோல்வி. கடைசி ஒருநாள் போட்டியில் முடிவு கிடைக்கவில்லை என்றாலும், முதலில் பேட்டிங் செய்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிவிட்டது. எப்படிப்பார்த்தாலும் தோல்வி தான். இந்த தோல்விகள் மூலம், ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது. அதாவது, ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 428 போட்டிகளில் தோற்றிருக்கிறது. உலகின் வேறு எந்த அணிகளையும் விட, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் தோற்ற அணி எனும் மோசமான சாதனையை இலங்கை படைத்திருக்கிறது.

 புகார் கடிதம்

புகார் கடிதம்

இந்நிலையில், இன்று (ஜுலை 6), அந்த அணி இலங்கை திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, இந்திய 'ஏ' அணியுடன், இலங்கை மோதுகிறது. இந்த சூழலில், இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இந்திய 'ஏ' அணியை அனுப்பி பிசிசிஐ எங்களை அவமதித்துவிட்டது என்று புகார் கடிதம் வேறு வாசித்திருக்கிறார். இந்த சூழலில், இலங்கை அணி, இந்திய 'ஏ' அணியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 இலங்கை மீளுமா?

இலங்கை மீளுமா?

சொந்த மண்.. இந்திய 'ஏ' அணி.. அருமையான வாய்ப்பு இலங்கை மீண்டும் ஃபார்முக்கு வர. ஆனால், வருவார்களா என்பதே சந்தேகம். ஏற்கனவே, இலங்கையில் தொடர் தோல்வியால், சமூக தளங்களில் தங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை இனி பின் தொடரப் போவதில்லை என்ற பிரசாரத்தை இலங்கை ரசிகர்கள் தொடங்கியிருக்கும் நிலையில், இந்திய தொடரை அவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இலங்கை அணி தற்போதுள்ள சூழலில் அம்பயர்கள் கூட ஒரு டீமாக சேர்ந்து, இலங்கை வீழ்த்திவிடலாம் போல.

Story first published: Tuesday, July 6, 2021, 17:34 [IST]
Other articles published on Jul 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+