Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடு ரோட்டிலா இப்படி செய்வது.. இங்கிலாந்தில் இலங்கை வீரர்கள் செய்த விதிமீறல் - வைரலாகும் வீடியோ!

துர்ஹாம்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி வீரர்கள் 3 பேர் நடுத்தெருவில் மோசமாக நடந்துக்கொண்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்திடம் தர்ம அடி வாங்கி இலங்கை ஒயிட் வாஷ் ஆனது.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

முதல் இரண்டு போட்டிகளில் 129, 111 ரன்களை மட்டுமே அடித்து மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி, 3வது போட்டியில் மிக மோசமாக 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றியது. இதனால் அந்த அணியின் வீரர்கள் மீது இலங்கை ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் திட்டி தீர்த்துள்ளனர்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்நிலையில் இலங்கை அணியை சேர்ந்த வீரர்கள் புதிய பஞ்சாயத்தை இழுத்து விட்டுள்ளனர். கொரோனா காரணமாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்பில் வைத்துதான் அழைத்துச் செல்கின்றன. அந்தவகையில் இலங்கை வீரர்களும் பபுளில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பபுள் விதிகளை மீறி குசல் மெண்டீஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் வெளியில் சுற்றித்திரிந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

சாலையில் அமர்ந்திருந்த குஷல் மெண்டீஸ், மற்றும் நிரோசன் டிக்வெல்லா ஆகியோர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்கள் மூவரையும் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் குனதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து வாரியத்திடம் கோரியுள்ளனர்.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இவர்கள் மூவரும் முக்கிய வீரர்களாக பார்க்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, June 28, 2021, 19:28 [IST]
Other articles published on Jun 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+