Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் 'டிரா'!

லண்டன்: இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இங்கிலாந்து, இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Sri Lanka draw with England in cliffhanger of 1st Test at Lord’s

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை இலங்கை விளையாடியது. இலங்கை அணி 453 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 122 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடியது. அந்த அணி 8 விக்கெடுகளை இழந்து 267 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்ஸை கடைசி நாளான நேற்று இலங்கை அணி எதிர்கொண்டது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது இலங்கை.

இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

Story first published: Tuesday, June 17, 2014, 11:43 [IST]
Other articles published on Jun 17, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+