For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய அணிகளான இலங்கை-ஆப்கன் நாளை பலப்பரிட்சை! முதல் வெற்றிக்காக இரு அணிகளும் தீவிரம்

By Veera Kumar

வெலிங்டன்: தங்களின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கையும், ஆப்கானிஸ்தானும் நாளை நியூசிலாந்தின் டுனேடின் பல்கலைக்கழக மைதானத்தில் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு நாடுகளில் இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 98 ரன்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான்,, தனது முதல் ஆட்டத்தில், 105 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடமும் தோற்றன.

Sri Lanka eye big win against Afghanistan

இதனிடையே இவ்விரு அணிகளும் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி, இந்த போட்டி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும். இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இலங்கை அணி விவரம்: தில்ஷன், திரிமன்னே, சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் (கேப்டன்), கருணா ரத்னே அல்லது தினேஷ் சன்டிமால், ஜீவன் மென்டிஸ், திசரா பெரேரா, குலசேகரா, ஹெராத், மலிங்கா.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: முகமது நபி, அப்சர் ஜசாய், அப்டாப் ஆலம், அஸ்கர் ஸ்டானிக்சாய், தவ்லத் ஜத்ரான், குல்பதின் நயிப், ஹமீத் ஹசன், ஜாவீத் அகமதி, மிர்வாய்ஸ் அஷ்ரப், நஜிபுல்லா ஜட்ரான், நாசிர் ஜமால், நவ்ரோஸ் மங்கல், சமியுல்லா ஷென்வாரி, ஷாபூர் ஜர்டான், உஸ்மான் ஹனி.

Story first published: Saturday, February 21, 2015, 17:09 [IST]
Other articles published on Feb 21, 2015
English summary
Outplayed in their opening match, former champions Sri Lanka would look to put their campaign back on track but debutantes Afghanistan would aim to surprise them in their second pool A match of the cricket World Cup on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X