Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்காத ஸ்கோர்.. கடைசி ஓவரில் பறந்த சிக்ஸர்கள் - இந்தியாவுக்கு "நெருக்கடி"

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி எதிர்பார்த்ததை விட மிக சிறப்பான ஸ்கோரை எட்டியுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜுலை 18) கொழும்பு பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

 யாருமே எதிர்பார்க்கவில்லை

யாருமே எதிர்பார்க்கவில்லை

இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷானகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, இஷான் கிஷன் (w), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இவ்வளவு ஸ்கோரை எட்டும் உண்மையில் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வேகப்பந்து வீச்சாளர்கள் முதல் 8 ஓவர்களில் வீசினார்கள். அதில் பந்தில் எந்த இம்பேக்ட்டும் இல்லை. இதனால், 9வது ஓவரிலேயே ஸ்பின்னர்களை களமிறக்கினார் கேப்டன் தவான்.

 பொய்யான கணிப்பு

பொய்யான கணிப்பு

இதற்கு உடனடி பலன் கிடைத்தது. இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகள் ஸ்பின்னர்களுக்கே விழுந்தது. கிட்டத்தட்ட அந்த அணியின் டாப் மற்றும் மிடில் ஆர்டர் அந்த அணி 120 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே காலியாகிவிட்டது. மேற்கொண்டு 2 விக்கெட்டுகள் விழுந்தால், 180 ரன்களுக்குள் இலங்கையை சுருட்டிவிடலாம் என பலரும் எண்ணினர்.

 அதிகபட்ச ஸ்கோர்

அதிகபட்ச ஸ்கோர்

ஆனால், இலங்கை அணியில் ஒருவரை தவிர மற்ற எவரும் 40 ரன்களை எட்டவில்லை என்றாலும், பெரும்பாலான வீரர்கள் 25, 30, 35 என ரன்களை திரட்ட, அந்த அணியை 262 ரன்களை எட்டிவிட்டது. அதிகபட்சமாக, இலங்கை அணியின் கருணரத்னே 43 ரன்களும், கேப்டன் ஷானகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர்.

Recommended Video

Tailenders-ஐ மீண்டும் கட்டுப்படுத்த தவறிய Indian Team.. ரசிகர்கள் விமர்சனம்
 19 ரன்கள்

19 ரன்கள்

இந்திய அணிய தரப்பில், சாஹர், சாஹல் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக புவனேஷ் குமார் வீசிய இறுதி ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் கருணரத்னே. இதனால் அந்த ஓவரில் 19 ரன்கள் சேகரிக்கப்பட்டது. சத்தியமாக இலங்கை இவ்வளவு ஸ்கோர் அடிக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது நெருக்கடி உண்மையில் இந்தியாவுக்கு தான். பிட்ச் வேறு டர்ன் ஆவதால், இலங்கை இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூட வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, July 18, 2021, 19:10 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+