Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியை பாதியில் நிறுத்த இலங்கை போட்ட பலே திட்டம்.. பேட்டை எறிந்து கோபப்பட்ட கோஹ்லி

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் இதை காரணம் காட்டி இலங்கை அணி போட்டியை நிறுத்துவதற்கு முயன்றது. பலமுறை இதற்காக அவர்கள் நடுவரிடம் முறையிட்டனர்.

இது மைதானத்தில் சில நிமிடம் பிரச்சனையை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் இந்த செயல் கோஹ்லிக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

போட்டியை நிறுத்த வேண்டும்

போட்டியை நிறுத்த வேண்டும்

டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். அதேபோல் களத்தில் இருந்த அம்பயர்களும் முகத்தை மூடிக்கொண்டு விளையாடினார்கள். இந்த மோசமான புகை காரணமாக இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி முறையிட்டனர். ஆனால் நடுவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை.

வீரர்கள் வெளியேறினார்கள்

வீரர்கள் வெளியேறினார்கள்

இந்திய அணி மிகவும் வலுவாக இருந்த நிலையில் இலங்கை எப்படியாவது போட்டியை நிறுத்த முயற்சி செய்தது. இதன் காரணமாக இரண்டு வீரர்கள் புகையை காரணம் காட்டி வெளியேறினார்கள். கோஹ்லி இதனால் கோபப்பட்டு நடுவர்களிடம் முறையிட்டார். கோபத்தில் இருந்த கோஹ்லி டோணி போலவே மைதானத்தில் படுத்து சாந்தமாக முயற்சி செய்தார்.

பெரிதான பிரச்சனை

பெரிதான பிரச்சனை

இலங்கை அணியின் பிட்னஸ் அறிவுரையாளர் நடுவரிடம் இது குறித்து முறையிட்டார். வீரர்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். இந்த பிரச்சனை காரணமாக போட்டி 30 நிமிடம் தடைபட்டது. மேலும் ரவி சாஸ்திரியும் ஒருமுறை மைதானத்திற்கு வந்து இதுகுறித்து விளக்கம் கேட்டார். இலங்கையின் கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் போட்டி தொடர்ந்தது.

கோபமான கோஹ்லி

கோபமான கோஹ்லி

இந்த நிலையில் 3 பந்துகள் போட்ட இலங்கை அணி மீண்டும் வீரர்கள் பழையபடி புகார் அளித்தனர். இந்த நிலையில் கோஹ்லி கோபப்பட்டு பேட்டை தூக்கி வீசி எறிந்தார். பின் அவுட் ஆனா கோஹ்லி சில நேரத்தில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி போட்டியை நிறுத்த வேண்டாம் இன்னிங்ஸை டிக்ளேர் செய்து கொள்கிறோம் என்று கூறினார்.

Story first published: Sunday, December 3, 2017, 18:50 [IST]
Other articles published on Dec 3, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+