Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விளையாடிட்டு வந்து எல்லோரும் வாந்தி எடுத்தார்கள்.. இலங்கை கோச் "கண்ணீர்"!

டெல்லி: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. டெல்லியில் நிலவி வரும் மாசு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

இந்த போட்டியில் புகை, இலங்கை வீரர்களுக்கு மிக அதிகமாக தொல்லை கொடுத்தது. புகையை காரணம் காட்டி இலங்கை வீரர்கள் பல முறை போட்டியை நிறுத்த முயற்சி செய்தனர்.

இந்த நிலையில் போட்டி முடித்த பின் இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இலங்கை வீரர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார்கள் என்று அந்த அணியின் கோச் கூறியுள்ளார்.

புகைக்கெல்லாம் புகை

புகைக்கெல்லாம் புகை

டெல்லியில் தற்போது மிகவும் மோசமான அளவிற்கு புகை நிலவி வருகிறது. உலகில் தற்போது டெல்லி மாசடைந்த தலைநகரங்களில் பட்டியலில் முக்கியமான இடத்தை வகிக்கிறது. தற்போது டெல்லியில் பனி புகை எல்லாம் சேர்ந்து ஒரு கலவையாக இருக்கிறது. டெல்லியில் புகையின் அளவு 381 புள்ளிகள் என்று அபாயகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

நிக்காம ஓடு ஓடு

நிக்காம ஓடு ஓடு

இலங்கை வீரர்கள் அனைவரும் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு விளையாடினார்கள். இலங்கை அணியின் வீரர்கள் நடுவரிடம் போட்டியை நிறுத்தும்படி முறையிட்டனர். ஆனால் நடுவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. புகையை காரணம் காட்டி லாகிரு காமேஜ், சுரங்கா லக்மால் ஆகியோர் விளையாடாமல் வெளியேறினார்கள். மற்ற பிளேயர்கள் களம் இறங்க மறுத்த போது இலங்கையின் பயிற்சியாளர்களே 'நாங்கள் களம் இறங்க முடியுமா?' என்று கேட்டு நடுவர்களிடம் சண்டையிட்டனர்.

வீரர்களுக்கு வாந்தி

வீரர்களுக்கு வாந்தி

இந்த நிலையில் போட்டி முடித்து இலங்கை வீரர்கள் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். இதுகுறித்து இலங்கை அணியின் சுகாதார ஆலோசகர் இதுகுறித்து கூறும் போது ''வீரர்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டார்கள். சுரங்கா நான்கு முறைக்கும் அதிகமாக வாந்தி எடுத்துவிட்டார். எல்லோரும் ஆக்சிஜன் சிலண்டர்களை வைத்து சுவாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று மிகவும் கோபமாக பேசி இருக்கிறார்.

தொடரும் பிரச்சனை

தொடரும் பிரச்சனை

மைதானத்தில் இன்றும் மோசமான சூழ்நிலை நிலவினால் கண்டிப்பாக விளையாட மாட்டோம் என்று இலங்கை தரப்பு கூறியிருக்கிறது. அதேபோல் இதுகுறித்து நடுவர்களிடம் கடுமையாக புகார் அளிக்க போவதாகவும் கூறியுள்ளனர். அதே சமயத்தில் நேற்று இலங்கை வீரர்கள் போட்டிக்கு பல முறை தொந்தரவு செய்தது குறித்து பிசிசிஐ, இலங்கை வாரியத்திடம் புகார் அளிக்க உள்ளது.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

நேற்றைய போட்டியில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து இருந்தனர். ஆனால் இந்திய வீரர்கள் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை. மேலும் நேற்று போட்டியை காண 20,000 பேர் வந்துள்ளனர் . அவர்களுக்கும் இந்த புகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் சில நாட்களுக்கு முன்பு அங்கு நடந்த மாரத்தான் போட்டியில் 30,000 பேர் கலந்து இருக்கிறார்கள். இவர்கள் யாருமே அந்த புகையால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை வீரர்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை என்று கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Story first published: Monday, December 4, 2017, 10:01 [IST]
Other articles published on Dec 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+