Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெஸ்ட் கேப்டன்.. பெஸ்ட் டீம்.. இந்திய அணியின் சாதனையை சொல்லும் புள்ளி விவரத்தை பாருங்க

நாக்பூர்: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது இந்திய அணி.

இதுதொடர்பான சில சுவாரசிய புள்ளி விவரங்களை பாருங்கள்:

2016ம் வருடம் முதல் இதுவரை இந்திய அணி பெற்ற 16வது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 11 வெற்றிகளை இக்கால கட்டத்தில் பெற்றுள்ளன.

ஆஸி., இலங்கை

ஆஸி., இலங்கை

இலங்கையும், ஆஸ்திரேலியாவும் இதே காலகட்டத்தில் தலா 9 வெற்றிகளை பெற்றுள்ளன. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த விஷயத்தில் ஒன்று. இரண்டும் தலா 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

மேற்கு இந்திய தீவுகள்

மேற்கு இந்திய தீவுகள்

பட்டியலில் கடைசி இடம், பழைய பண்ணையாரான மேற்கு இந்திய தீவுகளுக்கு. இந்த அணி, 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சமீப காலத்தில் இந்திய அணி டெஸ்ட் ஆட்டத்தில் ஜாம்பவானாக திகழ்கிறது என்பது உறுதியாகியுள்ளது.

கோஹ்லி சாதனை

கோஹ்லி சாதனை

31 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள விராட் கோஹ்லி அதில் 20 முறை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதில் முதலிடம் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு உள்ளது. வலுவான அவரது அணி 23 முறை வெற்றி பெற்றிருந்தது. அதற்கடுத்த இடமும் ஆஸி. மாஜி கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கு. அவர் அதே காலகட்டத்தில் 21 முறை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் தலைமையிலான அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

இந்தியா ஆதிக்கம்

இந்தியா ஆதிக்கம்

இந்திய மண்ணில் இலங்கை 11வது முறையாக டெஸ்டில் தோற்கிறது. இதில் 9 முறை இன்னிங்ஸ் தோல்வி அடைந்து மண்ணை கவ்வியுள்ளது இலங்கை அணி. 188 ரன்கள் வித்தியாசத்தில் ஒருமுறையும், 259 ரன்கள் வித்தியாசத்தில் மற்றொருமுறையும், இந்தியாவிடம் இலங்கை அணி தோற்றது.

Story first published: Monday, November 27, 2017, 14:55 [IST]
Other articles published on Nov 27, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+