Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியின் போது திடீர் நெஞ்சு வலி.. தொடர்ந்து 3வது நபரா.. இலங்கை - வங்கதேச தொடரில் என்ன நடக்கிறது??

தாக்கா: டெஸ்ட் போட்டியின் போது முன்னணி வீரர் குசல் மெண்டீஸ் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் கடும் சவால் கொடுத்ததால் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

பரபரப்பு நொடிகள்

பரபரப்பு நொடிகள்

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில் போட்டி விறுவிறுப்புக்கு இடையே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டத்தின் 23வது ஓவரின் போது ஃபீல்டிங் செய்துக்கொண்டு இருந்த இலங்கை வீரர் குசல் மெண்டீஸ் திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு தடுமாறினார்.

என்ன காரணம்

என்ன காரணம்

இதனால் அவசர அவசரமாக மருத்துவக்குழு களத்திற்குள் நுழைந்து முதலுதவி அளித்தது. எனினும் அவர் வலியில் துடித்துக்கொண்டு இருந்ததால் உடனடியாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். நெஞ்சு வலிக்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அஜீரணக்கோளாரால் அடைப்பு ஏற்பட்டிருக்கும் எனத்தெரியவந்துள்ளது.

முக்கிய வீரர் இல்லையே

முக்கிய வீரர் இல்லையே

இந்த தொடரில் இலங்கை அணியின் தூணாக குசல் மெண்டீஸ் தான் உள்ளார். முதல் டெஸ்டில் அவர் அடித்த 54 மற்றும் 48 ரன்கள் தான் சமன் செய்ய உதவியது. இதனால் இவர் தற்போது ஆட்டத்தை விட்டு வெளியேறியிருப்பதால் இலங்கை எப்படி சமாளிக்கப்போகிறது என்ற அச்சம் ரசிகர்களுக்கு உள்ளது.

3வது நபரா?

3வது நபரா?

இதுஒருபுறம் இருக்க, இந்த தொடரில் இப்படி களத்தை விட்டு வெளியேறும் 3வது நபர் இவராகும். இதற்கு முன்னர் முதல் டெஸ்டில் அம்பயர் ரிச்சர்ட் கெட்டுல்பாரஃப் அதிக வெப்பத்தால் தலைசுற்றுவதாக கூறி வெளியேறினார். இதே போல தசைப்பிடிப்பு காரணமாக தமிம் இக்பால் ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 23, 2022, 18:27 [IST]
Other articles published on May 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+