
4 முக்கிய விக்கெட்டுகள்
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, இஷான் கிஷன் (w), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பிடித்திருந்தார். இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பிறகும் மீண்டு வந்து இந்த டீசண்ட்டான ஸ்கோரை எட்டியுள்ளது.

அதிகபட்ச ஸ்கோர்
இதில் ஆச்சர்யம் என்னவெனில், இலங்கை அணியில் ஒருவரை தவிர மற்ற எவரும் 40 ரன்களை எட்டவில்லை என்றாலும், அந்த அணி 262 ரன்களை எட்டிவிட்டது. அதிகபட்சமாக, இலங்கை அணியின் கருணரத்னே 43 ரன்களும், கேப்டன் ஷானகா 39 ரன்களும், அசலங்கா 38 ரன்களும் எடுத்தனர். இன்னும் சொல்லப்போனால், இன்றைய போட்டியில் அந்த அணி புதிய சாதனையே படைத்திருக்கிறது. ஆம்! ஒருவர் கூட அரைசதம் அடிக்காமல், இலங்கை அணி ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும்.

52 ரன்கள்
இந்திய அணிய தரப்பில், சாஹர், சாஹல் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குறிப்பாக கடைசி 5 ஓவர்கள் தான் இலங்கை அணியின் தலையெழுத்தையே மாற்றியது எனலாம். ஆம்! கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 52 ரன்கள் குவித்துவிட்டது. அதிலும் கடைசி 2 ஓவரில் 32 ரன்கள் விளாசியது. புவனேஷ் குமார் வீசிய இறுதி ஓவரில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் கருணரத்னே. இதனால் அந்த ஓவரில் 19 ரன்கள் சேகரிக்கப்பட்டது.

பறந்த சிக்ஸர்கள்
கருணரத்னே யார்க்கர் போடவே புவனேஷ் முயற்சி செய்தார். ஆனால் பந்துகள் அனைத்து லோ ஃபுல் டாஸாக சென்று இறங்கியது. இதனால், அவர் வாகாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். மற்ற இலங்கை வீரர்களை போல் அல்லாமல், அவரது ஹிட்டிங் கடுமையாக இருந்தது. பவர் ஹிட்டர் என்பது தெளிவாக தெரிந்தது. அவரது விஷயத்தில் புவனேஷ் சற்று மெத்தனமாக இருந்துவிட்டதாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











