For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பிரித்து மேய்ந்தது இலங்கை... "செம" ஆட்டம்.. "எம" வெற்றி.... !

வெல்லிங்டன்: நியூசிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமான அதே வெல்லிங்டன் மைதானத்தில் இலங்கையிடம் ஒரு சோகமான தோல்வியைச் சந்தித்துள்ளது இங்கிலாம்து.

திரிமன்னேவும், குமார சங்கக்கராவும் இணைந்து இங்கிலாந்து பந்து வீச்சை தவிடு பொடியாக்கி விட்டனர். குறிப்பாக சங்காவின் ஆட்டத்தில் வழக்கம் போல அனல் பறந்தது. அதி வேகமாக சதமடித்து அசத்தி விட்டார்.

முன்னதாக முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் அபாரமாக ஆடி 121 ரன்களைக் குவித்தார்.

Sri Lanka thrash England

மொயீன் அலி 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் மோர்கன் 27 ரன்களில் வீழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லரின் பங்கு 25. கடைசி நேரத்தில் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 19 ரன்களில் 390 ரன்Kளைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் காரணமாக 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து.

இலங்கைத் தரப்பில் பந்து வீச்சு சரியில்லை. இதன் காரணமாகவே இங்கிலாந்து ரன் குவிக்க முக்கியக் காரணமாகி விட்டது. ஆனால் பேட்டிங்கில் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டனர் இலங்கை வீரர்கள்.

எப்படி வங்கதேசத்திற்கு எதிராக சொல்லி வைத்து கில்லி போல ஆடினார்களோ அதேபோல இங்கிலாந்து பந்து வீச்சை பிரித்தெடுத்து விட்டனர்.

லஹிரு திரிமன்னேவும், திலகரத்னே தில்ஷனும் சேர்ந்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து என்னென்னவோ செய்து பார்த்தது. வீரர்களுடன் வம்பிழுப்பிலும் ஈடுபட்டுப் பார்த்தனர் இங்கிலாந்து பவுலர்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் தில்ஷனும், திரிமன்னேவும் பிரமாதமாக ஆடினர்.

கடந்த போட்டியில் சதமடித்த தில்ஷன் இம்முறை 55 பந்துகளில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். மறு முன்னையில் நங்கூரம் போல நின்று திரிமன்னே சிறப்பாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு திரி்மன்னேவும், தில்ஷனும் இணைந்து 100 ரன்களைக் குவித்தனர்.

தொடர்ந்து திரிமன்னேவும், சங்கக்கராவும் இணைந்து வெளுத்தனர். அதிலும் சங்கக்கரா சரவெடி போல வெடித்து விட்டார். வந்த பந்தையெல்லாம் அவர் ரன்னாக்க ரொம்பவே புண்ணாகிப் போனது இங்கிலாந்து பந்து வீச்சு.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் போட்டது போலவ இந்தப் போட்டியிலும் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மின்னல் வேக சதத்தைப் போட்டார் சங்கா. 86 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறு முன்னையில் திரிமன்னே 143 பந்துகளில் 139 ரன்களைக் குவித்தார்.

சங்காவின் ஆட்டம்தான் இங்கிலாந்துக்கு எதிராக போட்டியை முழுமையாக திருப்ப உதவியது என்று கூறலாம். சங்காவுக்கு இது 23வது ஒரு நாள் சதமாகும்.

47.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 312 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது இலங்கை.

ஆட்ட நாயகனாகவும் சங்கக்கரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே மைதானத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்திடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து. அதேபோல ஒரு தோல்வியை இன்று இங்கிலாந்திடம் அது வாங்கியுள்ளது.

Story first published: Sunday, March 1, 2015, 12:00 [IST]
Other articles published on Mar 1, 2015
English summary
Sri Lanka thrashed England by 9 wickets in their encounter at Wellington. Sanga slammed a beautiful ton and Thirimannae scored a century too.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+