மீண்டு ஃபார்முக்கு திரும்பிய பாண்ட்யா.. மைதானத்தில் சிக்ஸர் மழை.. பயிற்சி ஆட்டத்தின் வீடியோ வைரல்!
கொழும்பு: இலங்கை தொடருக்கான இந்திய அணியின் 2வது பயிற்சி ஆட்டம் படு பரபரப்பாக நடைபெற்றுள்ளது.
Recommended Video
இலங்கை சென்றுள்ள இந்திய ஏ அணி 3 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
இதற்காக கடந்த 28ம் தேதியன்றே இலங்கை சென்றடைந்த ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி பயிற்சியை தொடங்கியுள்ளது.

இண்ட்ரா ஸ்குவாட்
இலங்கை உள்நாட்டு அணியுடன் பயிற்சி ஆட்டம் வேண்டும் என இந்திய வீரர்கள் கோரியிருந்தனர். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. இதனால் இந்திய அணி இண்டரா ஸ்குவாட் பயிற்சி போட்டிகளில் ஈடுபட்டுள்ளது. அதாவது இந்திய அணியே 2 குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்வது.

அசுர பலம்
இதன் ஒருபகுதியாகக் கடந்த ஜூலை 6ஆம் தேதி, இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான் தலைமையில் ஒரு அணியாகவும், புவனேஷ்வர் குமார் தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து பயிற்சியாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ், ருத்ராஜ் கெயிக்வாட், பிரித்விஷா, தேவ்தத் பட்டிக்கல் ஆகிய வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

சிக்ஸர்கள்
இந்நிலையில் 2வது பயிற்சி ஆட்டம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தகவல் வெளியிடவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியம் 2 நிமிட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, பிரித்வி ஷா ஆகியோர் அதிரடி சிக்ஸர்களை பறக்கவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பவுலிங்
பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்திய காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. எனினும் ஸ்கோர் குறித்த விவரத்தை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications