Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 ஆண்டு ஆதிக்கம்.. அசைக்க முடியாத ஃபார்ம்.. இந்தியா - இலங்கை அணிகள் மோதிய போட்டிகளின் புள்ளிவிவரம்!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

Recommended Video

Srilanka அணியை Spin Attacksல் முடித்த India | Oneindia Tamil

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் இலங்கையை விட இந்திய அணி பல்வேறு வகையில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் விளையாடிய புள்ளிவிவரத்தை பார்க்கலாம்.

மொத்த போட்டி

மொத்த போட்டி

இந்தியா - இலங்கை அணிகள் இதுவரை 159 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 91 முறை வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 56 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு போட்டி சமனிலும், 11 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் இருந்துள்ளது.

அதிக ரன் அடித்த வீரர்

அதிக ரன் அடித்த வீரர்

இந்த 159 போட்டிகளில் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே அதிக ரன்களை குவித்த வீரராக உள்ளார். 80 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், 3113 ரன்களை விளாசியுள்ளார். இதில் 8 சதங்களும், 17 அரைசதங்களும் அடங்கும். இவருக்கு அடுத்தபடியாக சனத் ஜெயசூர்யா (2899 ரன்கள்), குமார் சங்கக்காரா (2700 ரன்கள்), ஜெய்வர்தனே (2666 ரன்கள்), எம்.எஸ்.தோனி (2383 ரன்கள்) உள்ளனர்.

10 போட்டிகள்

10 போட்டிகள்

இரு அணிகளும் மோதிய கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 10 போட்டிகளில் இந்தியா 8 வெற்றிகளும், இலங்கை அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. முதல் வெற்றி 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியிலும், 2வது வெற்றி 2017ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் வந்ததாகும்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இலங்கை அணி சமீபத்திய தொடர்களில் மோசமாக விளையாடியுள்ளது. அனுபவ வீரர்கள் மிக குறைந்த அளவிலேயே தற்போது இருப்பதால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளில் அந்த அணியில் தடுமாற்றம் தெரிகிறது. கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 18, 2021, 15:53 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+