Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு இல்லை.. அணி தேர்வுக்கு பின்னால் உள்ள ரகசியம்.. இஷானுக்கு அதிர்ஷ்டம்

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

Recommended Video

IND vs SL Playing11ல் Sanju Samsonஐ எடுக்காத காரணம் இதுதான் | Oneindia Tamil

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

இளம் படையை கொண்ட அணியுடன் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், இன்றைய போட்டியில் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஓப்பனிங், பவுலிங் இடங்களுக்கு போட்டிகள் நிலவினாலும், விக்கெட் கீப்பர் இடத்திற்கு நிச்சயம் சஞ்சு சாம்சன் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்காத வாய்ப்பு

எதிர்பார்க்காத வாய்ப்பு

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வீரர் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அணியில் சீனியர் வீரர் இருக்கும் போது இளம் வீரர் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் சஞ்சு சாம்சன் விளையாடாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

பயிற்சி ஆட்டத்தின் போது சஞ்சு சாம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ப்ளேயிங் 11 தேர்வுக்கு கூட கலந்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த இஷான் கிஷானை களமிறக்க பயிற்சியாளர் டிராவிட் முடிவெடுத்துள்ளார்.

காத்திருப்பு நீடிப்பு

காத்திருப்பு நீடிப்பு

சீனியர் ப்ளேயரான சஞ்சு சாம்சன் இந்திய அணிக்காக டி20 போட்டியில் விளையாடி இருந்தாலும், சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவில்லை. இதற்காக 5 வருடங்களுக்கும் மேலாக காத்துள்ளார். இந்த இலங்கை தொடரிலாவது அது நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் காத்திருப்பு நீண்டுள்ளது.

Story first published: Sunday, July 18, 2021, 17:54 [IST]
Other articles published on Jul 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+