For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே எதிர்பார்க்கலை.. முதல் டெஸ்டில் நியூசிலாந்து அதிர்ச்சித் தோல்வி.. இலங்கை செம கெத்து வெற்றி!

நியூசிலாந்து அணி அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்டு இருந்த நிலையில், இலங்கை வெல்வது கடினம் என்றே போட்டிக்கு முன் பேசப்பட்டது. ஆனால், சொந்த மண்ணில் நாங்க தான் கெத்து என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது இலங்கை அணி.

குறிப்பாக இலங்கை அணியின் கேப்டன் டிமுத் கருணாரத்னே சதம் அடித்து இரண்டாவது இன்னிங்க்ஸில் நான்கு மற்றும் ஐந்தாம் நாட்களில் தூணாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார்.

கருணாரத்னே அபாரம்

கருணாரத்னே அபாரம்

உலகக்கோப்பை தொடரிலேயே சர்வதேச ஒருநாள் போட்டிகள் அனுபவம் இல்லை என்றாலும் தன் ஆட்டத்தாலும், கேப்டன்சியாலும் ஈர்த்த கருணாரத்னே, தற்போது தன் கோட்டையான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித் தந்துள்ளார். இலங்கை அணி பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அனுபவம் நிறைந்த நியூசிலாந்து அணியை வென்றது.

நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

நியூசிலாந்து முதல் இன்னிங்க்ஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது கடினமாக மாறியது. முதல் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்தது.

வில்லியம்சன் டக் அவுட்

வில்லியம்சன் டக் அவுட்

ராஸ் டெய்லர் அடித்த 86 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் அடித்த 42 ரன்களும் தான் அணியைக் காப்பாற்றியது. கேன் வில்லியம்சன் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இலங்கை அணியின் தனஞ்செயா 5, லக்மல் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்தது.

இலங்கை முதல் இன்னிங்க்ஸ்

இலங்கை முதல் இன்னிங்க்ஸ்

இலங்கை அணியின் மாத்யூஸ் 50, மென்டிஸ் 53 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தனர். விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 61 ரன்கள் எடுத்தார் லக்மல் ஒன்பதாவது பேட்ஸ்மேனாக இறங்கி 40 ரன்கள் எடுத்தார், இலங்கை 267 ரன்கள் குவித்தது. நியூசிலாந்தின் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

நியூசிலாந்து இரண்டாம் இன்னிங்க்ஸ்

நியூசிலாந்து இரண்டாம் இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸில் வில்லியம்சன் 4 ரன்களும், ராஸ் டெய்லர் 3 ரன்களும் எடுத்து அணியை கைவிட்டனர். மூத்த வீரர்கள் சொதப்பினாலும், டாம் லாதம் 45, வாட்லிங் 77, சோமர்வில்லி 40 ரன்கள் எடுக்க நியூசிலாந்து 285 ரன்கள் சேர்த்தது.

சேஸிங் செய்ய முடியுமா?

சேஸிங் செய்ய முடியுமா?

இலங்கை அணிக்கு 268 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒன்றரை நாள் ஆட்டம் மீதமிருந்தது. ஆனால், இலங்கை அணியால் சேஸிங் செய்ய முடியுமா என்ற கேள்வி இருந்தது. அதை உடைத்து எறிந்தார் இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே.

நங்கூரம் போட்டு நின்றார்

நங்கூரம் போட்டு நின்றார்

முதல் இன்னிங்க்ஸில் 39 ரன்கள் சேர்த்த அவர், இரண்டாம் இன்னிங்க்ஸில் துவக்க வீரராக நங்கூரம் போட்டு நின்றார். அவருக்கு அபார ஒத்துழைப்பு அளித்து ஆடிய மற்றொரு துவக்க வீரர் திரிமன்னே 64 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி.

இலங்கை வெற்றி

இலங்கை வெற்றி

கருணாரத்னே 122 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மாத்யூஸ், டி சில்வா இறுதியில் அணியை வெற்றி பெற வைத்தனர். இலங்கை அணி 4 விக்கெட்கள் இழந்து வெற்றி இலக்கான 268 ரன்களை எட்டியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முத்த டெஸ்டில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, August 18, 2019, 15:33 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Sri Lanka vs New Zealand first Test Galle match result and highlights
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+