Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீயெல்லாம் மனுஷனே இல்லை.. டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய பிராட்மேன்.. 13 இன்னிங்ஸில் 5 செஞ்சுரி

கல்லே: இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மென்டிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இமாலய சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டான் பிராட்மேனுடன் முக்கிய சாதனை ஒன்றை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

இதுவரை எட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் கமிந்து மென்டிஸ், அந்த எட்டு போட்டிகளிலும் 50 ரன்களுக்கும் மேல் சேர்த்து இமாலய சாதனையை செய்து இருந்தார். தற்போது அந்த எட்டு போட்டிகளில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி ஐந்து சதங்களை அடித்து, மேலும் புதிய சாதனையை செய்து இருக்கிறார்.

kamindu mendis sri lanka new zealand

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் சதம் அடித்தார். அது அவரது ஐந்தாவது டெஸ்ட் போட்டி சதம் ஆகும். முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு சதமும், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு சதங்களும், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு சதமும் அடித்து இருந்தார் கமிந்து மென்டிஸ்.

இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரராக இருக்கிறார். முன்னதாக இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 20 இன்னிங்ஸ்களில் நான்கு சதங்களை அடித்து, இந்த ஆண்டு அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். அதை தற்போது முறியடித்து இருக்கிறார் கமிந்து மென்டிஸ்.

இந்த பட்டியலில் ஒல்லி போப் 3 சதங்களும், சுப்மன் கில் 3 சதங்களும், கேன் வில்லியம்சன் 3 சதங்களும் அடித்து அடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்து விரைவாக 5 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் கமிந்து மென்டிஸ்.

இந்த பட்டியலில் டான் பிராட்மேன் 13 இன்னிங்க்ஸ்களில் 5 சதம் அடித்து அதே மூன்றாவது இடத்தில் இருக்கிறார். கமிந்து மென்டிஸ் டான் பிராட்மேன் உடன் இந்த மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆசிய அளவில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதில் இருந்து விரைவாக 5 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றிருக்கிறார் கமிந்து மென்டிஸ்.

தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் முதல் தர போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ளவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் இதே போல தொடர்ந்து விளையாடினால் தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரராக மாற வாய்ப்பு உள்ளது.

Story first published: Friday, September 27, 2024, 15:04 [IST]
Other articles published on Sep 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+