Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல்ல பாசிட்டிவ்... இப்ப நெகட்டிவ்... உற்சாகத்தில் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

கேப் டவுன் : இலங்கை உடனான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா மோதவுள்ளது.

இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அந்த அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் சில வீரர்களுக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இலங்கை தொடருக்காக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள அணியினருக்கு நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

நிறுத்தப்பட்ட தொடர்

நிறுத்தப்பட்ட தொடர்

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து -தென்னாப்பிரிக்கா தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

சில வீரர்களுக்கு பாசிட்டிவ்

சில வீரர்களுக்கு பாசிட்டிவ்

இதற்கென முன்னதாக தென்னாப்பிரிக்க அணி வீரர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் சில வீரர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் பயோ செக்யூர் சூழலில் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

டெஸ்ட் தொடர் 26ம் தேதி துவக்கம்

டெஸ்ட் தொடர் 26ம் தேதி துவக்கம்

இந்நிலையில் அணியில் முன்னாள் தென்னாப்பிரிக்க அன்டர் 19 அணியின் கேப்டன் ரேனாட் வான் டோன்ட, லூத்தோ சிபாம்லா மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

அனைவருக்கும் நெகட்டிவ்

அனைவருக்கும் நெகட்டிவ்

இந்நிலையில் நேற்றைய தினம் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகவும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து அணி வீரர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Story first published: Monday, December 21, 2020, 16:59 [IST]
Other articles published on Dec 21, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+