Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தில்ஷன், சங்ககாரா அதிரடி சதம்.. வங்கதேசத்தை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!

மெல்போர்ன்: வங்கதேசத்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த வங்கதேசத்தை 240 ரன்களில் ஆல் அவுட் செய்ததன் மூலம், 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை.

வங்கதேசம் தனது முதல் போட்டியில் ஆப்கனை வீழ்த்தியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதேபோல இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற நிலையில், ஆப்கனை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இலங்கை முதலில் பேட்டிங்

இலங்கை முதலில் பேட்டிங்

இதனிடையே வங்கதேசம் மற்றும் இலங்கையிடையே மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

திரிமன்னே திணறல்

திரிமன்னே திணறல்

திரிமன்னே மற்றும் தில்ஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சில் திரிமன்னே மிகவும் திணறினார். மோர்டசா வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஸ்லிப்பில் திரிமன்னே கொடுத்த கேட்ச் மிஸ் செய்யப்பட்டதால் அவர் தப்பினார்.

இருப்பினும் மறுமுனையில் தில்ஷன் அதிரடியாக ஆடிவந்தார். 78 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ருபல் ஹொசைன் பந்து வீச்சில், தெஸ்கின் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து திரிமன்னே அவுட் ஆனார்.

பலே ஜோடி

பலே ஜோடி

இதன்பிறகு களமிறங்கிய சங்ககாராவும் அதிரடி காண்பித்தார். தில்ஷனும், சங்ககாராவும் வங்கதேச பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச பவுலர்கள் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இருவரும் சதம்

இருவரும் சதம்

நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்கள் முடிவில் இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது. தில்ஷன் 22 பவுண்டரிகள் உதவியுடன் 146 பந்துகளில் 161 ரன்களும், சங்ககாரா, 1 சிக்சர், 13 பவுண்டரிகள் உதவியுடன் 76 பந்துகளில் 105 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தனது 400வது ஒருநாள் போட்டியில் சங்ககாரா, இந்த சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது சங்ககாராவின் 22வது சதமாகும்.

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி

2வதாக பேட்டிங் செய்த வங்கதேசத்திற்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது பந்திலேயே தமிம் இக்பால் கிளீன் பௌல்ட்டாகி, ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். அனமுல் ஹாக் 29, சவும்யா சர்கார் 25, முகமதுல்லா 28, ஷாகிப் அல் ஹசன் 46, முஷ்பிகுர் ரஹிம் 36, சபிர் ரகுமான் 53 ரன்கள் எடுத்து வங்கதேச ஸ்கோரை சீராக உயர்த்தினர்.

பரிதாப தோல்வி

பரிதாப தோல்வி

ஆயினும் சீரான இடைவெளியில் ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்ததால், 47வது ஓவரில் 240 ரன்களுக்கு வங்கதேசம் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 92 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது. நல்ல ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற்றேயாக வேண்டிய போட்டியில் இலங்கை, இந்த வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Thursday, February 26, 2015, 17:13 [IST]
Other articles published on Feb 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+