Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி இலங்கையில்.. இலங்கை அணியோ இந்தியாவில்.. விமானியால் வந்த குழப்பம்..போட்டி எங்கு நடக்கிறது

கொழும்பு: இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இலங்கை அணியோ, இந்தியாவுக்கு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வீரர்களை கொண்ட இந்திய ஏ அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு இரு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம்

இலங்கை சுற்றுப்பயணம்

இந்த தொடருக்காக இந்திய அணி கடந்த 28ம் தேதியே இலங்கை சென்றுவிட்ட நிலையில் இலங்கை வீரர்கள் அங்கு இல்லை. அவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர். கடந்த 4ம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் தோல்வியை சந்தித்த அவர்கள், நேற்று தான் இலங்கை திரும்பினர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இந்நிலையில் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் தான் தாய் நாட்டிற்கு திரும்பினார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியானது. இந்திய அணி வீரர்கள் இலங்கையில் இருக்கும் போது, அவர்கள் ஏன் இந்தியாவுக்கு சென்றனர். போட்டிகள் எங்கு நடக்கிறது என்பது கூட மறந்துவிட்டார்களா என ரசிகர்கள் காரணம் தெரியாமல் விமர்சித்து வந்தனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் மைக்கே ஆர்தர் பதிலளித்துள்ளார். அதில், நாங்கள் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய போது இந்தியாவுக்கு திசைதிருப்பப்பட்டோம். விமானத்தில் எரிப்பொருள் குறைவாக இருந்த காரணத்தினால் விமானி இந்தியாவில் தரையிறக்கினார். அங்கு சிறிது நேரம் எரிப்பொருள் நிரப்பிவிட்டு பின்னர் புறப்பட்டது. இந்தியாவில் இருந்த இந்த சிறிய நேரத்தில் தான் இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா உறுதியான தகவல் எனக்கு கிடைத்தது. வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் எனத்தெரிவித்துள்ளார்.

பரிசோதனை

பரிசோதனை

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூலை 13ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இலங்கை வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு வரும் முடிவுகளை பொறுத்துதான் போட்டிகள் நடக்குமா என்பது குறித்தே தெரியும் என்ற சூழல் நிலவுகிறது.

Story first published: Wednesday, July 7, 2021, 22:58 [IST]
Other articles published on Jul 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+