Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை தோல்வியால் பணிநீக்கம் செய்யப்பட்ட கோச் -இழப்பிடு வழங்க கோரிக்கை

கொழும்பு : கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் தோல்வியுற்ற இலங்கை அணி, 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த தோல்வியை அடுத்து இலங்கையின் தலைமை பயிற்சியாளர் சந்திகா மற்றும் அவருக்கு கீழ் செயல்பட்ட பயிற்சியாளர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தன்னை பணிநீக்கம் செய்ததால், தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சந்திகா ஹதுருசிங்கா, இலங்கை கிரிக்கெட் வாரியம் இதற்காக 32.6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

தோல்வியடைந்த இலங்கை அணி

தோல்வியடைந்த இலங்கை அணி

கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றது. மேலும் 6வது இடத்திற்கு அந்த அணி தள்ளப்பட்டது. அணியின் மோசமான ஆட்டமே இதற்கு காரணமாக இருந்தது.

இலங்கை பயிற்சியாளர் நீக்கம்

இலங்கை பயிற்சியாளர் நீக்கம்

இலங்கையின் இந்த தோல்வியை அடுத்து அணியின் பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிந்தவர்கள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

விளையாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு

விளையாட்டு அமைச்சர் குற்றச்சாட்டு

இதையடுத்து ஹதுருசிங்காவிற்கு அதிக சம்பளம் அளிக்கப்படுவதாகவும் ஆனால் அதற்கேற்ற பலனை அவர் தர தவறிவிட்டதாகவும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றம் சாட்டியிருந்தார்.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம்

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமனம்

இதையடுத்து ஹதுருசிங்கா பணிநீக்கம் செய்யப்பட்டு, கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்தர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

இழப்பீடு வழங்க கோரிக்கை

இதனிடையே, பணிநீக்கம் செய்ததால் தன்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் தனக்கு 32.6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு சந்திகா ஹதுருசிங்கா கடிதம் எழுதியுள்ளார்.

ஹதுருசிங்கா கோரிக்கை

ஹதுருசிங்கா கோரிக்கை

தனக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இழப்பீடு இரண்டையும் சேர்த்து தனக்கு 32.6 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று ஹதுருசிங்கா கோரியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் செயலாளர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, January 5, 2020, 18:27 [IST]
Other articles published on Jan 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+