Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் ஒரு டாப் கிளாஸ்தான்... வீரர்களுக்குள் நிலவும் போட்டி, ஒருவருக்கு மட்டும் ஆதரவளித்த ஸ்ரீகாந்த்

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ப்ளேயிங் 11ல் சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைக்குமா என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி என்னவாக இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் நிலவும் இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவுக்கு இடையேயான போட்டி குறித்து கிருஷ்ணமாச்சார் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளார்.

முதல் டி20

முதல் டி20

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு முன்னர் நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் இந்திய அணிக்கு இந்த டி20 தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே இதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்க கூடும்.

நிழவும் குழப்பம்

நிழவும் குழப்பம்

அந்தவகையில் இந்திய அணியில் முதல்முறையாக இஷான் கிஷான், ராகுல் தேவட்டியா சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளேயிங் 11ல் 4வது விக்கெட்டிற்கு களமிறங்க இஷான் கிஷானுக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் போட்டி நிலவி வருகிறது. 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் கிளாஸ் ப்ளேயர்

டாப் கிளாஸ் ப்ளேயர்

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், இந்திய அணியில் பல்வேறு சிறந்த திறமைசாலிகள் உள்ளனர். யாரை கைவிட போகிறார்கள் என்பது மிகப்பெரும் கேள்வி. ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒரு டாப் கிளாஸ் ப்ளேயர், இப்படிபட்ட சிறந்த கிரிக்கெட் வீரருக்கு ப்ளேயிங் 11ல் விளையாட தகுதியானவர். அவர் இந்த தொடரில் சிறப்பாக ஆட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 ஹாக் கருத்து

ஹாக் கருத்து

இதுகுறித்து பேசியுள்ள பிராட் ஹாக், இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் 360 டிகிரியிலும் அடிக்கக்கூடிய திறமையான வீரர். மிக ஆக்ரோஷமானவர் அவருக்கு எதிராக பந்துவீசுவது என்பது கடினமான ஒன்று என தெரிவித்துள்ளார். அவர் தகுதியான வீரர் என தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 12, 2021, 18:18 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+