
தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் மெல்போர்னில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கவுள்ளது. இதற்கென இந்திய வீரர்கள் மெல்போர்னில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அஜிங்க்யா ரஹானே தலைமையில் இந்த போட்டியை இந்திய அணியினர் எதிர்கொள்ளவுள்ளனர்.

கேப்டன் அனுபவம்
கடந்த 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், அந்த அணிக்கு ரஹானே கேப்டனாக இருந்த அனுபவம், அவருக்கு நாளைய போட்டியில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு சாதகம்
இந்நிலையில் ரஹானேவின் பொறுமையான செயல்பாடு இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் கேப்டன் விராட் கோலி போல உடனடியாக தன்னுடைய ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையாக அணி வீரர்களை ரஹானே வழிநடுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்வாளர்கள் யோசிப்பார்கள்
அவருடைய பொறுமையான செயல்பாட்டின்மூலம் அடுத்த 3 போட்டிகளில் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் கேப்டனுக்கான பொறுப்பிற்கு தேர்வாளர்கள் அவர் குறித்து யோசிப்பார்கள் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். ஆயினும் கேப்டன் கோலி சிறப்பாக செயல்பட்டு வருவதையும் சுட்டிக் காட்ட அவர் தவறவில்லை.


Click it and Unblock the Notifications